விஷால் பட நடிகை வெளியிட்ட கிளுகிளு போட்டோ.. ஜொள்ளுவிட்டு ரசிக்கும் ரசிகர்கள்!
மும்பை : இயக்குனர் திரு இயக்கிய தீராத விளையாட்டு பிள்ளை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் சாரா ஜனே தியாஸ்.
Recommended Video
பிரபல மாடல் அழகியான இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல விருதுகளை மாடலிங்கிள் போட்டியில் வென்றுள்ளார்.
தமிழில் இதுவரை ஒரே ஒரு திரைப் படத்தில் மட்டும் நடித்து இருந்த சாரா தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நீச்சல் குள போட்டோ ஒன்று ரசிகர்களை உச்சுக் கொட்ட வைத்துள்ளது.

கதாநாயகியாக அறிமுகம்
தமிழில் பிளேபாய் கதாபாத்திரங்களை மையமாக கொண்டு பல படங்கள் வெளியாகி இருந்தாலும் தீராத விளையாட்டு பிள்ளை என்ற பெயரிலேயே உருவான திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் சாரா ஜனே தியாஸ்.

மூன்று கதாநாயகிகள்
இயக்குனர் திரு இயக்கத்தில் விஷால் அதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்திருந்த தீராத விளையாட்டு பிள்ளை திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

சாரா ஜனே தியாஸ்
நீது சந்ரா, தானுஸ்ரீ தத்தா இவர்களுடன் இணைந்து மூன்றாவது கதாநாயகியாக சாரா ஜனே தியாஸ் கவர்ச்சி பொங்க நடித்து மிரட்டி இருந்தார். மூன்று கதாநாயகிகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்த இந்த படத்தில் விஷால் தீராத விளையாட்டுப் பிள்ளையாக முதன்முதலாக ப்ளேபாய் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

ஹிந்தியில் பிஸியாக
தமிழில் முதல்முறையாக அறிமுகமான சாரா அதற்குப் பின் வேறு எந்த தமிழ் படங்களிலும் நடிக்காமல், ஹிந்தி திரைப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். ஹிந்தியில் ஹாப்பி நியூ இயர், கேம், ஒ தேறி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.

புகைப்படங்களை பகிர்ந்து
இவ்வாறு ஹிந்தி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் சாரா பொது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் எதுவும் இல்லாததால் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து பொழுதை மகிழ்ச்சியாக கழித்து வருகிறார்.

நீச்சல் குள புகைப்படம்
அந்த வகையில் சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கவர்ச்சி பொங்கிய நீச்சல் குள புகைப்படம் ஒன்று தற்பொழுது அனைவரையும் கவர்ந்து வருகிறது.

கடல்கன்னி என வர்ணித்தும்
வெள்ளை நிற நீச்சல் உடையில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு சூட்டை தணிக்கும் வகையில் நீச்சல் குளத்தில் இறங்கி குளிக்க தயாராக இருக்கின்றவாறு எடுத்த கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்த இவரை பலரும் பாராட்டி வரும் வேளையில், நீச்சல் உடையில் உள்ள இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் கடல்கன்னி என
ஜொள்ளு விட்டபடி வர்ணித்தும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











