தடபுடலாக நடந்த நிச்சயம்.. எல்லையில்லா மகிழ்ச்சியில் சரண்யா பொன்வண்ணன்.. மகளுடன் செம டான்ஸ்!

சென்னை: நடிகை சரண்யா பொன் வண்ணன், கமலுக்கு ஜோடியாக நாயகன் படத்தில் அறிமுகமானார். தற்போதும் முன்னணி நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்து இப்போதும் லைம் லைட்டில் இருக்கிறார். அண்மையில் சரண்யா பொன் வண்ணனின் இரண்டாவது மகள் சாந்தினிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் போட்டோ தற்போது வெளியாகி உள்ளது.

நாயகன் படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்த சரண்யா, அந்த படத்தை தொடர்ந்து, மனசுக்குள் மத்தாப்பூ, என் ஜீவன் பாடுது, கருத்தம்மா, மீண்டும் சாவித்திரி என அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். இவர்,1995 ஆம் ஆண்டு நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். இவர்களுக்க பிரியதர்ஷினி, சாந்தினி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

Saranya Ponvannan daughter engagement

நடிகை சரண்யா: சில ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்த சரண்யா, ஜீவா நடிப்பில் வெளியான ராம் படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கினார். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தவமாய் தவமிருந்து, எம்டன் மகன், கிரீடம், விஐபி, களவாணி, ஒரு கல் ஒரு கண்ணடி என அடுத்தடுத்து படங்களில் முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். அம்மா கதாபாத்திரம் என்றாலே அது சரண்யா தான் என்ற பெயரை எடுத்துள்ளார்.

மகளின் நிச்சயதார்த்தம்: சரண்யா மற்றும் பொன் வண்ணணின் மூத்த மகள் பிரியதர்ஷினி குழந்தைகள் நல மருத்துவராகவும், இளைய மகள் சாந்தினி மகப்பேறு மருத்துவராகவும் உள்ளனர். அண்மையில் சரண்யாவின் இளைய மகள் சாந்தினிக்கும் டானினுக்கும் நிச்சயதார்த்தம் ஊட்டியில் தடபுடலாக நடந்தது. அந்த நிச்சயத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த நிச்சயதார்த்த போட்டோவை சரண்யாவோ, பொன் வண்ணனோ இணையத்தில் பதிவிடவே இல்லை. சரண்யா மகளுக்கு நிச்சயம் நடந்தது மேக்கப் கலைஞர் மூலம் ஒரு சில போட்டோக்கள் வெளியான போது தான் இந்த பத்திரிக்கையில் வந்தது. தற்போது, சாந்தினியின் பலபோட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதில், மகளுக்கு நிச்சயமான மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஆட்டம் போட்டுள்ளார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X