25 வயதிலேயே வாழ்க்கை முடிஞ்சி போச்சு.. குழந்தையுடன் தனியா நின்னேன்.. சசிலயா பேட்டி!
சென்னை: இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு பிரபலமான நடிகை சசிலயா, பகாசூரன், ஒயுட் ரோஸ், மதராஸ் மாஃபியா கம்பெனி, கிப்ட் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமா மட்டுமில்லாமல் மீனாட்சி பொண்ணுங்க, இதயம் போன்ற சீரியல்களிலும் நடித்து வருகிறார். யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள இவர், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.
அதில். நான் கர்ப்பமாக இருக்கும்போதே எனக்கும், என் கணவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு விட்டது. என் மகன் பிறக்கும் போது எனக்கு 25 வயது. அந்த வயதிலேயே என் வாழ்க்கை முடிந்து விட்டது. இப்போது என் மகனுக்கு பதினோரு வயது ஆகிறது கிட்டத்தட்ட 11 வருடங்களாக நான் தனியாக தான் வாழ்ந்து வருகிறேன். என் மகன் எல்கேஜி படிக்கும் போது, அப்பானா யாரும்மா என்று கேட்டான், அந்த வார்த்தை எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்தது. ஏனென்னால், நான் என் அப்பாவை நைனா என்று தான் அழைப்பேன்.

நடிகை சசிலயா: அதனால், அந்த வார்த்தை என்னவென்னே என் மகனுக்கு தெரியதால், அப்படி ஒரு வார்த்தையை கேட்டான் அதை என்னால், தாங்கிக் கொள்ளவே முடியவில்லை, அப்படியே நொறுங்கி விட்டேன். ஆனால், அதன் பிறகு என் மகன் அதைப்பற்றி கேட்பதே இல்லை. அவனுக்கு நன்றாக புரிதல் வந்து இருக்கிறது. நமக்கு அப்பா இல்லை, அம்மா மட்டும்தான், அம்மாவிற்கு சில கடமைகள் இருக்கிறது என்பதை அவன் புரிந்து கொண்டான். அனைவரின் வாழ்க்கையிலும் சண்டை, பிரச்சனை இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த சமூதாயத்திற்காக அனைவரும் அனுசரித்துக்கொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வருகின்றனர்.
கடவுள் மட்டும் தான் துணை: இன்று பல விஷயத்தை தைரியமாக பேசும் நான் சில ஆண்டுகளுக்கு முன்பு பேருந்தில் கூட தனியாக போகத்தெரியாது. ஆனால், என் வாழ்க்கை எனக்கு கற்று கொடுத்த பாடம், அனுபவம் என்னை தைரியமானவளாக மாற்றி இருக்கிறது. இருந்தாலும், இப்போதும் பல விஷயத்திற்கு நான் உடைந்து போவது உண்டு, ஆனால், அது என அறைக்குள் மட்டுமே இருக்கும். பல பிரச்சனைகள் வலிகளுக்கு பிறகு நான் பெரிதும் நம்புவது என் பெற்றோர் மற்றும் கடவுளைத்தான் என்று நடிகை சகிலயா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











