பளபளக்கும் பால் முகம் பற்றவைக்கும் பார்வை... இளசுகளை கவரும் சாயிஷா!

சென்னை : நடிகை சாயிஷா தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளது

நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சாயிஷாவுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது

திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் சாயிஷா இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

சாயிஷாவின் நடனம்

சாயிஷாவின் நடனம்

நடிகர் நாகார்ஜுனாவின் மகன் அகில் ஹீரோவாக அறிமுகமான அகில் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை சாயிஷா தமிழ் சினிமாவிற்கு வனமகன் படத்தின் மூலம் அறிமுகமானார் சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயம் ரவி வனமகன் படத்தில் தார்ஜன் கதாபாத்திரம் போல வித்தியாசமான வேடத்தில் நடித்து புதிய பரிமாணத்தை கொடுத்திருப்பார். வனமகன் படத்தில் சாயிஷாவின் நடனத்தை பார்த்த பலரையும் வாய்பிளந்து யாருடா இந்த பொண்ணு என கேட்க வைத்தார்

கடைக்குட்டி சிங்கம்

கடைக்குட்டி சிங்கம்

கார்த்திக்கு ஜோடியாக கடைக்குட்டி சிங்கம் என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்திலும் சாயிஷா நடித்தார் கூட்டுக் குடும்ப படங்களுக்கு பெயர் போன இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் அந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை அள்ளியது கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் உறவுகளின் உணர்வுகளையும் பாசத்தையும் பற்றி எடுத்துக்கூறும் கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்

பெண் குழந்தை பிறந்தது

பெண் குழந்தை பிறந்தது

நடிகை ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சாயிஷா ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த், காப்பான் மற்றும் டெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்போது இருவரும் இணைந்து புதிய திரைப்படத்திலும் நடித்து வருகின்றனர் இந்த நிலையில் ஆர்யா சாயிஷா தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பிறகும் நடிப்பதில் ஆர்வம் காட்டிவரும் சாயிஷா தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமாக உள்ளவராவார்.

பால் போன்ற க்யூட் முகம்

பால் போன்ற க்யூட் முகம்

தனது திரைப்படங்களில் அறிவியலையும் புகுத்தி வித்தியாசமான படைப்புகளை தொடர்ந்து கொடுத்து வரும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான டெடி திரைப்படம். முழுக்க முழுக்க டெடியை மையமாகக் கொண்டு வெளியானது. ஒருபுறம் பேசும் டெடியின் காமெடி மற்றொருபுறம் சாயிஷாவின் காதலென முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான டெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. எனவே ஆர்யா மற்றும் சாயிஷா மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். தமிழில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள சாயிஷா இப்பொழுது பளபளவென பால் போன்ற முகம் பற்றவைக்கும் பார்வையால் இளசுகளை கட்டி இழுக்கும் க்யூட் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X