ஹாட் பீச்சில் ஹாட்டாக போஸ் கொடுத்த நடிகை சாயிஷா!
சென்னை: நாகார்ஜுனாவின் மகன் அகில் நடிப்பில் வெளியான அகில் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார் நடிகை சாயிஷா
தமிழ் சினிமாவிற்கு வனமகன் மூலம் அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா,கஜினிகாந்த்,காப்பான், டெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்
நடிகர் ஆர்யாவை காதல் திருமணம் செய்துகொண்ட சாயிஷா இப்பொழுது ஹாட்டான பீச்சில் செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரலாகிறது

பாலிவுட்டில் சிவாய்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் நாகார்ஜுனாவின் மகன் அகில் ஹீரோவாக வலம் வந்து கொண்டுள்ளார். அகில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான அகில் என்ற படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார் அதே படத்தில் சாயிஷா கதாநாயகியாக நடித்து அறிமுகம் செய்யப்பட்டார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அதை தொடர்ந்து பாலிவுட்டிலும் சிவாய் என்ற படத்தில் நடித்து சாயிஷா அறிமுகமானார்

சாயிஷாவின் நடனம்
இந்நிலையில் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி தார்ஸனாக நடித்த வனமகன் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கால் தடத்தைப் பதித்த நடிகை சாயிஷா தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்தார் . வனமகன் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் இந்தப் படத்தில் சாயிஷாவின் நடனத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் பிரமித்துப் போயினர்

காதல் திருமணத்தில் முடிந்தது
வனமகன், கடைக்குட்டிசிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் மற்றும் டெடி ஆகிய படங்களில் சாயிஷா தமிழில் நடித்துள்ளார். இதில் நடிகர் ஆர்யாவுடன் முதல் முறையாக இணைந்து கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டு இப்பொழுது காதல் திருமணத்தில் முடிந்தது. ஆர்யா சாயிஷா தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் சமீபத்தில் பிறந்தது.

நேரடியாக ஓடிடி தளத்தில்
திருமணத்திற்கு பிறகும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சாயிஷா. அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் கதைகளையும் கேட்டு வருகிறார். அதில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையும் கேட்டு வருகிறார். கடைசியாக ஆர்யாவுடன் இணைந்து டெடி படத்தில் சாயிஷா நடித்திருப்பார் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. ஆர்யா,சாயிஷா ஜோடி மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைய உள்ளனர்.

பீச்சில் ஹாட்டான உடையில்
திருமணத்திற்கு பிறகும் கிளாமர் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் சாயிஷா இப்பொழுது ஹாட்டான பீச்சில் ஹாட்டான உடையில் எடுத்த ஹாட் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது


Click it and Unblock the Notifications











