பேக் டூ ஃபார்ம்மான நடிகை சாயிஷா.. குழந்தை பிறந்த சுவடே தெரியல.. தீயாய் பரவும் வொர்க் அவுட் போட்டோ!

சென்னை: பிரசவத்திற்கு பிறகு உடற்பயிற்சி மூலம் மீண்டும் சிக்கென மாறியுள்ளார் நடிகை சாயிஷா.

தெலுங்கில் 2015ஆம் ஆண்டு வெளியான அகில் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை சாயிஷா. அதனை தொடர்ந்து ஷிவாய் என்ற பாலிவுட் படத்தில் அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழிலும் தடம் பதித்தார் நடிகை சாயிஷா. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை சாயிஷா, அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டானார்.

கடைசியாக தமிழில் டெடி

கடைசியாக தமிழில் டெடி

தமிழில் கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், விஜய்சேதுபதியுடன் ஜுங்கா, ஆர்யாவுடன் கஜினிகாந்த், சூர்யா மற்றும் ஆர்யா நடித்த காப்பான், மீண்டும் ஆர்யாவுடன் டெடி என பல படங்களில் நடித்துள்ளார் சாயிஷா. இவர் கடைசியாக தமிழில் நடித்த படமும் டெடிதான் ஆகும்.

பெண் குழந்தை பிறந்தது

பெண் குழந்தை பிறந்தது

கஜினிகாந்த் படத்தில் நடித்தப்போது ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இவர்களுக்கு அரியனா என்ற பெண் குழந்தை பிறந்தது.

எடையை குறைத்து

எடையை குறைத்து

டெடி படத்திற்கு பிறகு நடிகை சாயிஷா தமிழில் எந்தப் படத்திலும் கமிட் ஆகவில்லை. குழந்தையுடன் நேரம் செலவழித்து வந்த சாயிஷா தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து பேக் டூ ஃபார்ம் ஆகி வருகிறார். ஜிம்மில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வரும் சாயிஷா, தனது வொர்க்கவுட் போட்டோவை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான விஷயம் அல்ல என தனது அனுபவத்தையும் இன்ஸ்டா பக்கத்தில் பகிந்துள்ளார் நடிகை சாயிஷா.

எளிதான விஷயம் அல்ல

எளிதான விஷயம் அல்ல

இததொடர்பான தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை சாயிஷா பதிவிட்டிருப்பதாது, குறிப்பாக பிரசவத்திற்குப் பிறகு உடல் எடையை குறைப்பது எளிதான விஷயம் அல்ல. இருப்பினும் ஒருவர் சீராகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும், நீங்கள் கூடுதல் எடையை கூட இழக்கலாம். அது தவிர்க்க முடியாதது. மேலும் ஒருவர் முடியாத இலக்குகளை அமைக்கக்கூடாது.

பிரபலத்தை பார்த்து...

பிரபலத்தை பார்த்து...

ஒவ்வொரு பெண்ணும் தன் சொந்த வழியில் அழகாக இருக்கிறாள். மெலிதாக இருப்பது நல்லது, ஏனெனில் இது உள்ளுறுப்பு கொழுப்பிலிருந்து நமது உறுப்புகளை விடுவிக்கிறது. ஆரோக்கியமாக இருப்பதுதான் இலக்காக இருக்க வேண்டும். அதற்கு நேரம் ஆகும். ஒரு பிரபலத்தைப் பார்த்து உங்கள் உடை குறைப்பு இலக்கை மட்டும் அமைக்காதீர்கள்.

Recommended Video

Sayyesha Vs Ramya Pandian, Dance Challenge | Classical Vs Western
ஃபிட்னஸ் ஒரு லைஃப்ஸ்டைல்

ஃபிட்னஸ் ஒரு லைஃப்ஸ்டைல்

ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு உடல் மற்றும் ஆரோக்கிய நிலை உள்ளது. இந்தப் போட்டோ என்னோட ஃபிட்னஸ் ஒரு லைஃப்ஸ்டைல் என்பதையும், அது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்பதையும் காட்டுவதற்கே என தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் ஹார்ட்டின்களை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: sayyesha சாயிஷா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X