குழந்தைப் பெற்ற பிறகும் ஆறடி அமுல் பேபி போல கச்சிதமாக இருக்கும் நடிகை சாயிஷா!
சென்னை : டார்ஜான் ஸ்டைலில் தமிழில் வெளியான ஜெயம் ரவியின் வனமகன் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை சாயிஷா.
கடைக்குட்டி சிங்கம் என்ற பிளாக்பஸ்டர் மூவியில் நடித்த பிறகு தமிழில் இவருக்கு வாய்ப்புகள் குவிகிறது
நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சயிஷாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் இப்போதும் ஆறடி அழகிய அமுல் பேபி போல சேலையில் அம்சமாக இருக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் டார்ஜான் வனமகனில்
நடிகர் நாகார்ஜுனாவின் மகன் அகில் ஹீரோவாக நடித்த அகில் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து முதல் முறையாக சினிமாவில் அறிமுகமான நடிகை சாயிஷா. தமிழுக்கு வனமகன் மூலம் அறிமுகமானார். தமிழ் சினிமாவின் டார்ஜான் என அழைக்கப்படும் வனமகன் படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருக்க இந்த படத்தை ஏ எல் விஜய் இயக்கியிருந்தார். தமிழ் சினிமாவிலேயே வித்தியாசமான முயற்சியில் வெளியான வனமகன் படத்தில் சாயிஷாவின் நடனம் அனைவரையும் கவர்ந்து ஆச்சரியப்பட வைத்தது .

கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா
இந்த நிலையில் அடுத்ததாக கார்த்திக்கு ஜோடியாக கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடிக்க சாயிஷாவுக்கு இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் மூவியாக அமைந்தது. குடும்ப கதைகளத்தை மையமாகக் கொண்டு உருவான கடைக்குட்டி சிங்கம் செம கலெக்ஷனை அள்ளியது. அதுமட்டுமல்லாமல் சாயிஷாவுக்கும் மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. இதன் பிறகு தமிழில் எக்கச்சக்கமான படங்களில் ஒப்பந்தமானார்

திருமணத்திற்கு பிறகும் நடிப்பதில் ஆர்வம்
கஜினிகாந்த், காப்பான்,டெடி என தொடர்ந்து ஆர்யாவுடன் இணைந்து 3 படங்களில் நடித்த சாயிஷா ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரீல் கப்புள் இப்பொழுது ரியல் கப்புளாக மாறியுள்ள நிலையில் இவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பிறகும் நடிப்பதில் ஆர்வம் கொண்ட சாயிஷா இப்பொழுது அதற்காக ஆயத்தமாகி வருகிறார்.
Recommended Video

ஆறடி அமுல்பேபி போல கச்சிதமாக இருக்கும் சாயிஷா
குடும்பம் ஒருபுறம் சினிமா மறுபுறம் என திருமணத்திற்குப் பிறகும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள சாயிஷா உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டிருக்கும் சாயிஷா திருமணத்திற்கு பிறகும் துளியும் எடை கூடாமல் அப்படியே இருக்கிறார். இந்த நிலையில் இப்போதும் ஆறடி அமுல்பேபி போல கச்சிதமாக இருக்கும் சாயிஷா சேலையில் கொள்ளை அழகில் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











