ரஜினி, அஜித் ஹீரோயின்களுக்கு மட்டும் ஓகேவாகுது.. ஆனா நமக்கு ஓரங்கட்டுதே.. கவலையில் சாயிஷா!
திருமணம் ஆகிவிட்ட காரணத்தால் நடிகை சாயிஷாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன.
சென்னை: நடிகை சாயிஷாவை தங்களுடைய படத்தில் ஹீரோயினாக்க பல ஹீரோக்கள் மறுத்து வருவதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.
விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சாயிஷா. தனது அபார நடன திறமையால் லேடி பிரபுதேவா என ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
விஜய் சேதுபதியுடன் ஜுங்கா, கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். மற்ற ஹீரோயின்கள் பொறாமைப்படும் அளவுக்கு சாயிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

ஆர்யாவுடன் திருமணம்
கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் நடித்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. பிறகு உடனடியாக இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

குறைந்து போன பட வாய்ப்புகள்
இதையடுத்து அவர் சூர்யாவுக்கு ஜோடியாக காப்பான் படத்தில் நடித்தார். தற்போது டெடி படத்தில் கணவர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் சாயிஷாவின் ஆசையாம்.

சாயிஷா அப்செட்
ஆனால் சாயிஷாவுக்கு திருமணம் ஆகிவிட்டதால் பல ஹீரோக்கள் அவரை தங்கள் படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய மறுப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. பொதுவாக ஹீரோயின்களுக்கு திருமணம் ஆகிவிட்டாலே மவுசு குறைந்துவிடும். சாயிஷா விஷயத்திலும் அது தான் நேர்ந்திருக்கிறது.

சமந்தா போல்...
திருமணமான நடிகையுடன் காதல் காட்சிகளில் நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என சில நடிகர்கள் யோசிக்கிறார்களாம். சமந்தா, வித்யா பாலன், ராதிகா ஆப்தே உள்ளிட்ட முன்னணி நடிகைகள் திருமணமான பின்னரும் படங்களில் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து டூயட் பாடுவதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் போது, தன்னை மட்டும் நிராகரிப்பார்களா என சாயிஷா தரப்பில் விளக்கம் தரப்படுகிறது.

டெடி மீது நம்பிக்கை
ஆனால் அதனை ஏற்க ஹீரோக்கள் மறுத்து வருகிறார்களாம். பாலிவுட் போல் இல்லாமல் தமிழில் ஏன் இப்படி இருக்கிறார்கள் என சாயிஷா அப்செட்டில் இருக்கிறாராம். டெடி ரிலீஸ்க்கு பிறகு நிச்சயம் தனக்கு பழைய மாதிரி பட வாய்ப்புகள் வரும் என நம்பிக்கையுடன் இருக்கிறாராம் அவர். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











