Actress Sayyeshaa: டான்சிங் கேர்ள் சாயிஷாவின் டான்ஸ் வீடியோ.. ப்பா என்னா ஆட்டம்!

சென்னை: ஏஎல் விஜய் -ஜெயம் ரவி காம்பினேஷனில் வெளியான வனமகன் படம் மூலம் கோலிவுட்டில் நாயகியாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை சாயிஷா. மிகக் குறுகிய காலகட்டத்திலேயே சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த சாயிஷா. ஒரு கட்டத்தில் நடிகர் ஆர்யாவை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்தபோது ஆர்யாவுடன் சாயிஷாவிற்கு காதல் ஏற்பட, அது திருமணத்தில் முடிநதது. இரண்டு ஆண்டுகளிலேயே பெண் குழந்தைக்கும் தாயானார் சாயிஷா. இதையடுத்து படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கிய சாயிஷா கடந்த ஆண்டில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றுக்கு ஆட்டம் போட்டிருந்தார்.

sayyeshaa Instagram tamil cinema

நடிகை சாயிஷா: ஏஎல் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருந்த வனமகன் படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை சாயிஷா. முதல் படத்திலேயே தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் சிறப்பான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த சாயிஷா தொடர்ந்து கார்த்தி, சூர்யா, ஆர்யா, விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தார். மிக குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகையாக மாறிய சாயிஷா, அதே வேகத்தில் நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கஜினிகாந்த் படத்தில் நடித்த போது ஆர்யாவிற்கும் சாயிஷாவிற்கும் காதல் பற்றிக்கொள்ள தன்னுடைய குடும்பத்தினரின் சம்மதத்துடன் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார் சாயிஷா.

ஆர்யா -சாயிஷா திருமணம்: முன்னணி நடிகையாக இருந்த நிலையில் இவரது திருமணம், ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. திருமணத்திற்கு பிறகு தான் கமிட் செய்த படங்களை மட்டும் நடித்து கொடுத்துவிட்டு தன்னுடைய கணவருடன் நேரத்தை செலவழித்தார் சாயிஷா. தொடர்ந்து இரண்டு வருடங்களிலேயே அழகான பெண் குழந்தைக்கும் தாயானார். தொடர்ந்து நடிக்க மாட்டார் என்று நினைக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் ஐட்டம் சாங்கிற்கு ஆடி மீண்டும் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்திருந்தார் சாயிஷா. ராவடி என்ற இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஹிட் பாடலாக மாறியது.

சமூக வலைதளத்தில் ஆக்டிவ்: மீண்டும் சாயிஷா கோலிவுட்டில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் தன்னுடைய மகள் மற்றும் கணவருடன் நேரம் செலவழிக்கும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சாயிஷா. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக அடுத்தடுத்த வீடியோக்களை பகிர்ந்து வரும் சாயிஷா, தற்போது அதிரடியாக ஆட்டம் போட்டுள்ள வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது. இதில் மிகச் சிறப்பான நடனத்தை பதிவு செய்துள்ளார் சாயிஷா. இந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.

டான்ஸ் வீடியோ: சாயிஷாவின் அடுத்தடுத்த போஸ்ட்களால் இன்ஸ்டாகிராமில் இவரை 3.7 மில்லியன் பேர் பாலோ செய்து வருகின்றனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் மிகவும் அழகான நடத்தை பதிவிட்டுள்ளார் சாயிஷா. இதன் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக வீடியோக்களை பதிவிடுகிறாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே காணப்படுகிறது. விரைவில் இதற்கான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். நடிகர் ஆர்யா தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக சார்பட்டா 2 படத்தில் இணையவுள்ளார். முன்னதாக பா ரஞ்சித் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கவுள்ள படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X