பிரபல நடிகைக்கு பிறந்த நாள் கட்டியணைத்து முத்தம் கொடுத்து வாழ்த்து சொன்ன அம்மா.. யாருன்னு பாருங்க!

சென்னை: பிரபல நடிகையான சாயிஷாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு முத்தமிட்ட போட்டோவை பகிர்ந்து அவரது அம்மா வாழ்த்து கூறியிருக்கார்.

மும்பையை பூர்விகமாக கொண்டவர் நடிகை சாயிஷா. 2015ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அகில் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே ஷிவாய் என்று இந்தி படத்தில் அறிமுகமானார். பின்னர் 2017ஆம் ஆண்டில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வன மகன் என்ற படத்தின் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார் சாயிஷா.

காதல் திருமணம்

காதல் திருமணம்

அடுத்தடுத்த கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான் என தமிழ் படங்களில் வரிசையாக ஒப்பந்தமானார். கஜினிகாந்த் படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சாயிஷா.

இன்று பிறந்த நாள்

இன்று பிறந்த நாள்

தொடர்ந்து டெடி என்ற படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படம் கொரோனா தொற்றால் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை சாயிஷா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

என்னுடைய புதையல்

என்னுடைய புதையல்

இதனை முன்னிட்டு சாயிஷாவின் தாயாரான ஷாஹீன் பானு அவருக்கு டிவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில் நான் எப்போதும் உனக்கு ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி மற்றும் ஒற்றுமையாக இருக்க வாழ்த்துகிறேன். என்னுடைய மிகப் பெரிய புதையலாகவும் சிறந்த மகளாகவும் இருப்பதற்கு நன்றி! பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் குழந்தை என தெரிவித்துள்ளார்.

கன்னத்தில் முத்தம்

கன்னத்தில் முத்தம்

மேலும் சாயிஷாவை அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுப்பது போன்ற போட்டோவையும் ஷாஹீன் பானு ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சாயிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி வருவதோடு இந்த போட்டோவையும் அதிகம் லைக்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X