சாப்டான கேரக்டர் வேணாம்... கவர்ச்சி வாய்ப்புக்காக ‘பிகினி’ போட்டோவுடன் அலையும் முன்னணி நடிகை
சாப்டான வேடங்கள் வேண்டாம், கவர்ச்சி தான் வேண்டும் என அடம் பிடிக்கிறாராம் டான்ஸ் நடிகை.
சென்னை : தமிழில் தற்போது பெரிய ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உள்ள டான்ஸ் நடிகைக்கு, சாப்டான வேடங்கள் வேண்டாமாம். இளைஞர்களை கவரும் வண்ணம் கவர்ச்சி வேடங்களில் நடிக்க ஆசையாம். இதற்காக புதிய படத்திற்கு ஒப்பந்தம் செய்ய வருபவர்களிடம் பிகினி போட்டோக்களைக் காட்டி வருகிறாராம்.
பாரஸ்ட் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் இந்த நடிகை. முதல் படத்திலேயே தன் நடனம் மூலம் அனைவரையும் அசர வைத்தார். இதனால் அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், கிடைத்தது எல்லாமே சாப்டான வேடங்கள் தான்.

தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் லயன் படத்திலும் கிராமத்து கதாபாத்திரம். அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியான வேடங்கள் இல்லை. இதனால் நடிகை கொஞ்சம் அப்செட்.
அம்மணிக்கு கவர்ச்சி வேடத்தில் அதகளம் செய்யும் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசையாம். எனவே, சில கமர்சியல் பட இயக்குநர்களை அனுகி, தன் பிகினி கெட்டப் புகைப்படங்களை காட்டி வருகிறாராம். புதிதாக பட ஒப்பந்தத்திற்கு வருபவர்களிடமும் கவர்ச்சிகரமான கதாநாயகி வேடமாக தாருங்கள் எனக் கேட்கிறாராம்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என நடிகை நினைக்கிறார். ஆனால், நன்றாக போய்க் கொண்டிருக்கும் ரூட்டை ஏன் மாற்ற நினைக்கிறார் என்கிறார்கள் அவருக்கு வேண்டப்பட்டவர்கள்.


Click it and Unblock the Notifications











