அந்த மாதிரி படத்தில் நடிக்காதனு யாருமே சொல்லல...லவ்வ கூட காசு கொடுத்து வாங்கினேன்..ஷகிலா வேதனை!

சென்னை: மலையாளத் திரைப்படமான ப்ளே கேள்ர்ஸ் படத்தின் துணை நடிகையாக அறிமுகமான ஷகிலா. பாலுணர்வு கிளர்ச்சியூட்டும் படங்களில் நடித்து தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை சேர்த்துக் கொண்டு புகழ் பெற்ற இவர், தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில், அந்த மாதிரி படத்தில் நடிக்காதனு யாரும் சொல்லவில்லை, காதலைக்கூட நான் காசு கொடுத்து தான் வாங்கினேன் என்றார்.

மலையாள கவர்ச்சி படங்களில் நடித்து புகழ் பெற்ற ஷகிலா. 90 காலகட்டத்தில் மலையாள திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். இவர் நடித்த திரைப்படங்கள் கேரளாவில் சக்கைப்போடு போட்டன. இவர் படத்தோடு மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே மோத பயந்துள்ளன. அந்த அளவுக்கு ஷகிலாவின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வந்தன. இதன்பின்னர் மலையாள திரையுலகம் ஷகிலாவுக்கு தடை விதித்ததால், ஷகிலா தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தார்.

actress shakeela emotional interview about her personal life

பின் கவர்ச்சி படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஷகீலா தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்து வந்தார். நடிகை ஷகிலாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது குக் வித் கோமாளி என்கிற சமையல் நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட ஷகிலா, தன்னுடைய சமையல் திறமை மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் முதல் கோமாளிகள் வரை அனைவரும் அவரை அம்மா என்று பாசத்தோடு அழைத்தனர். குக் வித் கோமாளி டைட்டிலை வெல்லுவார் என்று எதிர்பார்த்த நிலையில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார்.

நடிகை ஷகிலா: குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் யூடியூப் சேனலில் சர்ச்சைக்குரிய பிரபலங்களை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் இவர், யூடியூப்பில் நடிகர் நடிகைகள் குறித்து படுமோசமாக பேசும் பயில்வான் ரங்கநாதனை வெளுத்து வாங்கினார். வழக்கமாக மற்றவர்களை வச்சி செய்யும் பயில்வானை ஷகிலா அந்த பேட்டியில் கிழி கிழி என்று கிழித்துவிட்டார்.

இப்படித்தான் சினிமாவிற்கு வந்தேன்: இந்நிலையில், தற்போது ஷகிலா தனது வாழ்க்கை குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், பலர் நான் பிறந்தது கேரளா என்று நினைத்து இருக்கிறார்கள். நான் பிறந்தது தமிழ்நாட்டில் தான் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சரஸ்வதி வித்யாலயாவில் படித்தேன். ஒரு தேர்வில் மார்க் கம்மியாக வாங்கிவிட்டதால், அப்பா என்னை அடித்தார். அப்போது, பக்கத்தில் நட்சத்திர நாயகன் சினிமா கம்பெனியில் இருந்தவர்கள் ஓடி வந்து தடுத்தார்கள். அப்போது தான் ஒருவர் என்னிடம் நீ சினிமாவில் நடிக்கிறியா என்று கேட்டார். அது மட்டுமில்லாமல் எங்கள் பள்ளியில் அடிக்கடி ஷூட்டிங் நடக்கும் போது, பல முறை பார்த்து இருக்கிறேன் விதவிதமாக சாம்பார், கூட்டு, பொரியல் என்று இருக்கும் என்பதால், சினிமாவிற்கு வந்தா இப்படி வகை வகையாக சாப்பிடலாம் என்று ஆசைப்பட்டு சினிமாவிற்கு வந்தேன்.

யாருமே சொல்லல: அதே போல நான் நடித்த படத்தில் நீ தான் இரண்டாம் கதாநாயகி என்று அழைத்து சென்றார்கள். ஆனால், அந்த படத்தில் ரேப் சீன் வைத்து, என் உடையை எல்லாம் கிழித்து வேறு ஒரு நடிகையாக என்னை காட்டி விட்டார்கள். அதன் பிறகு எனக்கு இது போன்ற கதாபாத்திரமே வந்தது. அந்த படங்கள் எல்லாம் கேரளாவில் நன்றாக ஓடியது. என் குடும்பத்திற்காக நான் கடுமையாக உழைத்தேன் ஆனால், யாரும் இந்த மாதிரி படத்தில் நடிக்காதே, நான் உனக்காக இருக்கிறேன், உனக்கு நான் சாப்பாடு போடுகிறேன் என்று சொன்னதே இல்லை. மேலும், லவ்வர், தோழி என எந்த ஒரு உறவாக இருந்தாலும் பணம் கொடுத்துத்தான் வாங்குகிறேன். நான் எதையாவது வாங்கிக்கொடுத்தால் தான் அவர்கள் மகிழ்ச்சியாக என்னுடன் இருக்கிறார்கள் என்று ஷகிலா தனது வேதனையை அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X