Shakeela: மூட்டை மூட்டையாக பணம்.. அப்போ எல்லாம் ஒரு நாளைக்கு.. சீக்ரெட்டை உடைத்த ஷகிலா!
சென்னை: நடிகை ஷகிலா தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல், தென்னிந்திய சினிமாவில் மிகவும் மூத்த நடிகையாக உள்ளார். ஆரம்ப காலத்தில் கிளாமர் நடிகையாக அறியப்பட்ட ஷகிலா இப்போது, கிளாமர் நடிகை என்ற கட்டத்தில் இருந்து மெல்ல மெல்ல வெளியே வந்து கொண்டு உள்ளார். மேலும், இணையத்திலும் சின்னத்திரையிலும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள். இப்படியான நிலையில் ஷகிலா சமீபத்தில் அளித்த பேட்டியில், பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அண்மையில் அவரது ஹவுஸ் டூர் வீடியோ வெளியானது. அப்போது தனது வீட்டைச் சுற்றிக் காட்டிய நடிகை ஷகிலா, தான் சினிமா உலகில் மிகவும் பரபரப்பாக நடித்து கொண்டு இருந்த கால கட்டத்தில் தான் சம்பளம் வாங்கியது குறித்தும், அவற்றை தனது வீட்டில் எவ்வாறு வைத்திருந்தேன் என்பது குறித்தும் பேசினார். ஷகிலா தனது கடந்த காலங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அந்த ஹவுஸ் டூரில் பேசும் போது, " நான் பொய் எல்லாம் சொல்லவில்லை, உண்மையைச் சொல்லுகிறேன். இப்போது எனது வீட்டில் இருக்கும் இந்த கப்போர்ட்களைப் போல பக்கத்து வீடுகளில் இருக்காது. அங்கு எல்லாம் அலமாரிகள் தான் உள்ளது. நான் தான் பணத்தை வைக்க கப்போர்டாக மாற்றினேன். அப்போது எல்லாம் பணத்தை மூட்டை மூட்டையாக கொடுப்பார்கள். அவற்றை வைக்கத்தான் இங்கு மட்டும் இல்லாமல், பெட்ரூமில் உள்ள அலமாரி, சமையல் அறையில் உள்ள அலமாரி ஆகிவற்றை கப்போர்டாக மாற்றிவிட்டேன்.

மூட்டை மூட்டையாக: இப்போதுதான் செக் கொடுக்கிறார்கள். ஆனால் அப்போது செக் கொடுத்தால் பணத்தை ஏமாற்றி விடுவார்கள். ஆனால் நான் 1999 இல் இருந்து 2000 களின் இறுதி வரை மிகவும் பிசியாக நடித்து வந்தேன். அப்போது எல்லாம் எனக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளம் என்று தான் கணக்கு. ஒரு நாளைக்கு ரூபாய் 5 லட்சத்தில் இருந்து ரூபாய் 6 லட்சம் வரை சம்பளம். அப்போது எல்லாம் சம்பளத்தை பணமாகவே கையில் கொடுத்துவிடுவார்கள். அதுவும் பணத்தை மூட்டை மூட்டையாக கொடுப்பார்கள். அவற்றைக் கொண்டு வந்து இங்கு அடக்குவேன்.
பணம்: இப்போது அந்த பணம் எல்லாம் எங்கே என்ற கேள்விக்கு, அந்த பணம் எல்லாம் இப்போது எங்கே இருக்க வேண்டுமோ அங்கு உள்ளது. எங்கு போக வேண்டுமோ அங்கு போயுள்ளது. அவை வரவேண்டிய நேரத்தில் வரும். மேலும் இந்த பணம் எல்லாம் எங்கே போகும் என எனக்குத் தெரியும். எனவே நான் அவை திரும்பி என்னிடத்தில் வரும் என நான் எதிர்பார்க்கவில்லை, எனவே நான் வருத்தப்படவில்லை" என பதில் அளித்தார்.

மாற்றம்: ஷகிலா சின்னத்திரை பக்கம் காலடி எடுத்து வைத்த பின்னர் அவரது கெரியரில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக, கிளாமர் நடிகை என்ற டேக் லைன் அவரை விட்டுப் போனது. ஷகிலா இருக்கும் நிகழ்ச்சியை அனைவரும் பார்க்கத் தொடங்கி விட்டார்கள். மேலும் ஷகிலாவின் மிகவும் முதிர்ச்சியான பேச்சு பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படியான நிலையில் ஷகிலாவின் ஹோம் டூர் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











