கேரவனில் என்னவெல்லாம் கூத்து நடக்கும் தெரியுமா?.. பல விஷயங்களை போட்டுடைத்த ஷகீலா
சென்னை: நடிகை ஷகீலா இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருந்தவர். மலையாள திரையுலகில் கவர்ச்சி வேடங்களை ஏற்று நடித்த அவர் தமிழிலும் நடித்திருக்கிறார். அவருக்கென்று அப்போது பெரும் ரசிகர் பட்டாளமே இருந்தது. காலம் செல்ல செல்ல அவருக்கு சினிமா வாய்ப்புகள் கம்மியாகின. இப்போது யூட்யூப் சேனல்களுக்காக பேட்டிகள் எடுத்துவரும் அவர்; தான் அளிக்கும் பேட்டிகளில் பல விஷயங்களை ஓபனாக பேசக்கூடியவர். அந்தவகையில் அவர் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
மலையாள திரையுலகில் அறிமுகமாகி இந்திய அளவில் ஃபேமஸ் ஆனவர் ஷகீலா. சில்க் ஸ்மிதா நடித்த படத்தில்தான் முதன்முதலாக ஷகீலா அறிமுகமானார். அவர் அறிமுகமான சில காலத்திலேயே சில்க்குக்கு போட்டியாக அவரை நிறுத்தினார். சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துகொண்டு இறந்ததை அடுத்து ஷகீலாவுக்கான ரசிகர் வட்டம் மேலும் கூடியது. முக்கியமாக மலையாளத்தில் அவரது படத்துக்கு போட்டியாக களமிறங்கினால் மம்மூட்டி, மோகன் லால் ஆகியோரின் படங்கள்கூட தோற்றுவிடும் என்ற நிலை ஒருகட்டத்தில் நீடித்தது.

ஓரங்கட்டப்பட்ட ஷகீலா: அப்படி பக்கா மாஸாக வலம் வந்துகொண்டிருந்தார் ஷகீலா. ஆனால் அந்த மாஸே பிற ஹீரோக்களின் கண்களை உறுத்தியது. இதன் காரணமாக அவரை திட்டமிட்டு காலி செய்தார்கள் என்றும்; அதன் காரணமாகத்தான் அவர் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்கே வந்துவிட்டார் என்றும் இன்றளவும் பேச்சு ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் அவர் ஜெயம், அழகிய தமிழ் மகன், பாஸ் என்கிற பாஸ்கர் என பல படங்களில் நடித்திருக்கிறார்.
பிஸி ஷகீலா: இப்போது சினிமா வாய்ப்புகள் எதுவும் ஷகீலாவுக்கு இல்லை. அதேசமயம் தெலுங்கு பிக்பாஸ், விஜய் டிவியின் குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதுமட்டுமின்றி தனியார் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பது மட்டுமின்றி; சில சேனல்களுக்காக பேட்டிகளும் எடுத்தும்வருகிறார். அவர் கொடுக்கும் பேட்டியாக இருந்தாலும் எடுக்கும் பேட்டியாக இருந்தாலும் அதில் பல விஷயங்களை பேசியும், கேட்டும்விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷகீலா பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், "நான் நடிக்க ஆரம்பித்தபோது எங்களால் ஒரு உடையைக்கூட சரியான இடத்தில் மாற்ற முடியாது. சில இடங்களில் ஷூட்டிங்கிற்கு செல்லும்போது மேலே ஒரு பெரிய ஆடையை போட்டுக்கொண்டு நாங்கள் அணிந்திருக்கும் உடையை மாற்றும் நிலைதான் எங்களுக்கு எல்லாம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது எங்களை சுற்றி நூற்றுக்கணக்கான ஆண்கள் நின்றுகொண்டிருப்பார்கள். அதெல்லாம் வேதனையின் உச்சம்.
கேரவன் கூத்து: இப்போது இருப்பது மாதிரி அப்போதெல்லாம் எங்களுக்கு கேரவன் எல்லாம் இல்லை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பலரும் நினைப்பது போல் கேரவனில் உடை மாற்றும் விஷயங்கள் மட்டும் நடப்பதில்லை. உள்ளே சில பேர் ஒன்றாக கூடி உணவு உண்பார்கள். சில நேரங்களில் உடலுறவுகூட வைத்துக்கொள்வார்கள். ஆனால் ஒன்று அவைகளை நான் நேரில் பார்த்ததில்லை. அதேசமயம் பல நேரங்களில் இதுகுறித்த விஷயங்கள் எனது காதுகளுக்கு வந்திருக்கின்றன" என்றார்.


Click it and Unblock the Notifications











