மூட்டை மூட்டையாக பணம்.. போலீஸ், ரவுடிகளுடன் சகவாசம்.. பீர் குடித்து உடம்பு போட்ட ஷகீலா

சென்னை: திரையுலகில் தனக்கென்று தனி அடையாளத்தி்ல் முத்திரை பதித்து பின்பு அது தவறு என தெரிந்துகொண்டு பின்னர் மீண்டு வந்திருப்பவர் ஷகீலா. இவரது தனிப்பட்ட வாழ்க்கையை படம் எடுத்தால் நான்கு சீரிஸ் படங்களாகவே வெளியிடலாம் என அவரே கிண்டலாக தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் யூடியூப் சேனல்களில் சர்ச்சைக்குரிய விவாதங்களையும் கிளப்பி வருகிறார். இந்நிலையில், அவர் வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் இருந்ததாக சொன்னால் நம்ப முடிகிறதா? ஒரு நாளைக்கு அவர் வாங்கிய சம்பளம் என்று கூறும் போது தலையே சுத்துகிறது.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஷகீலா. தமிழில் விஜய் படங்களில் ஒரு விஷ்ணு படத்தில் நடனம் ஆடியிருக்கிறார். பின்பு, கவுண்டமணியுடன் காமெடி காட்சிகளிலும் நடித்திருந்தாலும், பெரிய அளவில் வளர்ச்சி அடைய முடியவில்லை. இதனால், நடிகையின் ரூட்டை மாத்திய ஷகீலா மலையாளத்தில் கவர்ச்சி படங்களில் நடிக்க தொடங்கினார். 90களில் இவர் படங்கள் ரிலீஸ் ஆனால் பெரிய மம்மூட்டி, மோகன்லால் படங்களுக்கு இல்லாத வரவேற்பு இவருக்கு இருக்கும். சூப்பர் ஸ்டார்களையே நடுங்க வைத்தவர் ஷகீலா. அவர் படங்கள் மலையாளம் மொழிகளில் மட்டும் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

actress-shakeela-latest-interview-viral

ஷகீலா போன்றோரின் கவர்ச்சி படங்கள் மலையாள சினிமாக்களை அழிப்பதாக கண்டனம் எழுந்த பிறகு இதுபோன்ற படங்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டது. இதன் பிறகு தனது ரூட்டை மாத்திக்கொண்ட ஷகீலா தமிழில் ஜெயம், பாஸ் என்கிற பாஸ்கரன், அழகிய தமிழ் மகன், மாஞ்சா வேலு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் படங்களில் சந்தானத்துடன் காமெடி காட்சிகளிலும் நடித்து பிரபலம் அடைந்தார். திரையுலகில் அவரை கவர்ச்சி நடிகை போன்ற கதாப்பாத்திரங்களே தொடர்ந்து இடம்பெற்றதால் நடிக்க பிரேக் விட்டார். தொடர்ந்து இதுபோன்ற காட்சியில் நடிப்பது அலுத்துவிட்டதாகவும் ஷகீலா தெரிவித்தார்.

அடையாளத்தை மாற்றிய ஷகீலா: இதுவரை கவர்ச்சி நடிகையாக தெரிந்த ஷகீலா விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு ஷகீலா யார் என்பதை மக்களும் தெரிந்து கொண்டனர். அவர் குடும்ப சூழல் தான் இதுபோன்ற படங்களில் நடிக்க காரணமாக இருந்ததையும் தெரிவித்தார். பின்பு, அவரது மனித நேயத்தை பார்த்து வியந்து போன சக போட்டியாளர்கள் அவரை அம்மா என்றே அழைக்க தொடங்கினர். திருமணம் செய்து குடும்பம், குழந்தைகள் என வாழ ஆசைப்பட்ட ஏக்கத்தையும் ஷகீலா கண்ணீரோடு தெரிவித்தார்.

actress shakeela latest interview viral

போலீஸ் ஆக ஆசை: நான் விருப்பப்பட்டு சினிமாவிற்குள் வரவில்லை. இந்த சூழலில் யாராக இருந்தாலும் தற்கொலை செய்துகொள்வார்கள். ஆனால், அதை விதி என நினைத்துக்கொண்டேன் என ஷகீலா தெரிவித்துள்ளார். மேலும், அப்பா கிளப்புக்கு சென்று பணத்தை தொலைத்துவிடுவார். அம்மா ஹாேட்டல் வைத்திருந்தார். ஹோட்டலும் வியாபாரம் ஆகாததால் சினிமாவிற்குள் வந்தேன். ஆனால், எனக்கு போலீஸ் ஆக வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. எனது உடலுக்கும் உயரத்திற்கும் அது சரியாக வராது என நினைத்ததால் அதில் ஈடுபாடு இல்லாமல் போய்விட்டது. மேலும் எனது அக்கா கர்ப்பமாக இருக்கும் போது அப்பா இறந்துவிட்டார். நான் மலையாள படத்தில் நடித்துக்கொண்டிருந்த நேரம். உதவிக்காக 25 ஆயிரம் சம்பளம் கேட்டேன். தயாரிப்பாளரும் உடனே கொடுத்தார் என கூறியுள்ளார்.

actress shakeela latest interview viral

யார் குடும்பத்தையும் கெடுக்கலை: இதுபோன்ற படங்களில் ஏன் நடித்தீர்கள் என பலரும் என்னிடம் கேட்பதாக தெரிவித்த ஷகீலா, "பெரிய ஸ்டார் படங்களில் இருந்து வந்த வாய்ப்பை நாண் வேண்டாம் என்று சொல்லவில்லை. வந்த வாய்ப்பை பயன்படுத்திகொண்டேன். மேலும், இயக்குநர்கள் என்னை நடிக்க அழைத்த படத்தில் நடித்தேன் என்றும் ஷகீலா தெரிவித்தார். நான் யாருடைய காலில் விழுந்து பிச்சை கேட்கவில்லை. பணத்திற்காக யாருடைய குடும்பத்தையும் அழிக்கவில்லை. வயிற்று பசிக்காகவும் சோறு கேட்கவில்லை. என் உடல் இருந்தது அதை காண்பித்து சம்பாதித்தேன். இந்த படங்களில் நடித்ததால் எனக்கு பெண்களை விட ஆண்கள் ரசிகர்களாக இருந்தனர். பெண்களுக்கு என்னை கண்டாலே பிடிக்காது. நான் ஏதாவது நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும்போது ஒரு பெண் பார்த்த பார்வையை மறக்க முடியாது" என கூறினார்.

குண்டாக காரணம் என்ன?: இந்நிலையில், பிரபல யூடியூப் சேனலுக்கு ஷகீலா அளித்த பேட்டியில் தனது உடல் பருமன் மாற்றம் அடைந்ததற்கான காரணத்தை தெரிவித்தார். இதில், அப்போது பட வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் ரொம்ப மன உளைச்சலால் பீர் குடித்தேன். பிறகு, மது பானங்கள் அதிகம் குடித்ததால் உடல் எடை கூடியது. இதன் பிறகு அதை குறைக்க முயற்சி செய்தும் பலன் இல்லை என தெரிவித்துள்ளார். 44 வருடங்களாக இந்த வீட்டில் வாழ்கிறேன். இந்த வீட்டில் 14 பேர் இருந்ததாக தெரிவித்தார். ஆனால், அப்போது இந்த வீட்டில் எனக்கு ஒரு அறை கிடைக்காதா என்று ஏங்கியிருக்கிறேன். இதில் என்ன ஸ்பெஷல்னா இந்த வீட்டிற்கு வராத நடிகர்களே கிடையாது என ஷகீலா உருக்கமாக தெரிவித்தார்.

actress shakeela latest interview viral

மூட்டை மூட்டையாக பணம்: தனது வீட்டை சுற்றி காண்பித்த ஷகீலா, வீட்டின் பீரோவை காண்பித்து அப்போது படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது மூட்டை மூட்டையாக பணம் இருந்தது. அதை வைக்க இந்த வீட்டில் இடம் பத்தவில்லை. ஒரு நாளைக்கு ரூ.5 லட்சம் சம்பாதித்திருக்கிறேன். பணப்புழக்கம் நிறைய இருந்தது சொந்தங்களும் கூடி இருந்தார்கள் என தெரிவித்தார். இதைக்கேட்ட தொகுப்பாளர் மலைத்து போய்விட்டார். ஒரு நாளைக்கு 5 லட்சம் சம்பாத்தியம் என்றால் இன்று உங்களிடம் கோடி கணக்கில் சொத்து இருக்க வேண்டும் என கேட்டுள்ளர். அதற்கு பதில் அளித்த ஷகீலா, நிறைய பணம் இருந்தது. இங்கு இருக்கும் மக்களுக்கு நிறைய பேரிடம் கொடுத்திருக்கிறேன். அதில், பலரும் திருப்பி கொடுத்துள்ளனர். வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காதவர்களும் இருக்கிறார்கள் என ஷகீலா தெரிவித்துள்ளார்.

ரவுடி, கேங்ஸ்டர்களை தெரியும்: இதில் மேலும் வியக்கும் விசயம் என்னவென்றால் ஷகீலாவிற்கு படத்தில் நடித்துக்கொண்டிருந்த காலத்தில் ரவுடிகள், கேங்ஸ்டர்களுடன் நட்புறவோடு இருந்ததாக தெரிவித்திருக்கிறார். இன்றைக்கும் அவர்கள் என்னை அக்கா அக்கா என்றே அழைப்பார்கள். எனக்கு ஒரு பிரச்னை என்றால் போலீஸ் முதல், ரவுடிகள் வரை வந்து நிற்பார்கள். யாரும் பணத்திற்காக வரவில்லை. என் மீது அன்போடு இருக்கிறார்கள். 25 வருடத்திற்கு முன்பு சம்பவம் செய்த ரவுடிகள் கூட இவரை அக்கா என்று அழைத்திருக்கிறார்களாம். இவரும் அவர்களுக்கு பண உதவி செய்ததாக தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X