Shakeela - 20, 30 காதல்கள்.. கையை அறுத்துக்கொண்ட காதலர்கள்.. ஷகீலா சொன்ன சீக்ரெட்
சென்னை: நடிகை ஷகீலா மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தமிழிலும் ஜெயம், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் அவர் தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கி யூட்யூப் சேனலை நடத்திவருகிறார். மேலும் பல யூட்யூப் சேனல்களுக்கு பேட்டியையும் அளித்துவருகிறார். இந்தச் சூழலில் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் தன்னுடைய காதல் வாழ்க்கை குறித்து ஏகப்பட்ட விஷயங்களை பகிர்ந்திருந்தார்.
மலையாள திரையுலகில் 18+ திரைப்படங்களில் நடித்து வெகு பிரபலமானவர் ஷகீலா. சில்க் ஸ்மிதா பீக்கில் இருந்தபோது சினிமாவுக்குள் வந்த ஷகீலா சில்க் நடித்த படத்தின் மூலம்தான் அறிமுகமும் ஆனார். சில்க்குக்கு போட்டியாக பலர் ஷகீலாவை முன்னிறுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருகட்டத்தில் ஸ்மிதா தற்கொலை செய்துகொண்டதால் அடுத்ததாக வந்த கவர்ச்சி நடிகைகள் ஷகீலாவுக்கு பின் நிலையிலேயே இருந்தனர். அப்படிப்பட்ட சூழலில் அவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து ஹிட்டடித்துக்கொண்டே இருந்தன.

போட்டி: மலையாள ஸ்டார்களான மோகன் லால், மம்மூட்டி ஆகிய இரண்டு பேரும் படு பிஸியாக இருந்த நேரத்தில்கூட அவர்களின் படங்களுக்கு போட்டியாக திகழ்ந்தது ஷகீலா நடித்த படம். உதாரணமாக கின்னாரா தும்பிகள் என்ற படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. அதனைப் பார்த்த ஒட்டுமொத்த மலையாள திரையுலகும் ஆச்சரியம்தான் பட்டது. முக்கியமாக மோகன் லால், மம்மூட்டி உள்ளிட்டோர் ஷகீலாவின் படங்களுக்கு எதிராக பல சூழ்ச்சி வேலைகளை பார்த்ததாகவும் ஒரு பேச்சு பல காலமாகவே உண்டு.
ஒதுங்கிய ஷகீலா: ஷகீலா தனது வாழ்க்கையில் ஏகப்பட்ட காதல் தோல்விகளை சந்தித்தவர். அதனை அவரே சொல்லியும் இருக்கிறார். சமீபத்தில்கூட ஒரு தகவலின்படி அவர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் மீது சிறு வயதில் காதலில் இருந்ததாகவும் பேச்சு ஒன்று ஓடியது. காலங்கள் செல்ல செல்ல ஷகீலாவிற்கான பட வாய்ப்புகள் குறைந்தன. இதனையடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மேலும் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி அளித்துவருகிறார்.
ஷகீலா பேட்டி: இந்நிலையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "குழந்தைகள் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். கடைக்கோ இல்லை வேறு எங்கோ செல்லுமோது அங்கு யாராவது குழந்தையை வைத்திருந்தால் அதை அவரிடமிருந்து வாங்கி ஐந்து நிமிடமாவது வைத்திருப்பேன். அந்தக் குழந்தை அழுதவுடன் அவர்களிடம் திருப்பி கொடுத்துவிடுவேன். அந்த அளவுக்கு குழந்தைகளை எனக்கு பிடிக்கும்.
ஆசை இருந்தது: திருமணம் செய்துகொண்டு நன்றாக வாழ வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்தது. ஆனால் நமது தலையில் என்ன எழுதியிருக்கிறதோ அதுதானே நடக்கும். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் எனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டும். ஒரு குடும்பம் வேண்டும் என்பதற்காக எல்லாம் வலுக்கட்டாயமாக திருமணம் செய்துகொள்ள முடியாது என்பதுதான் உண்மை.
20, 30 காதல்கள்: நான் எனது வாழ்க்கையில் கிட்டத்தட்ட 20லிருந்து 30 காதல்கள்வரை செய்திருப்பேன். அந்த எல்லா காதல் வாழ்க்கையையுமே திருமணத்தை நோக்கி நகர்த்தி செல்ல முயற்சிகள் செய்தேன். ஆனால் அவை எதுவுமே ஒர்க் அவுட் ஆகவில்லை. இதனை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். நான் இப்படித்தான். இதனை ஓபனாக சொல்வதால் என்னை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால்கூட எனக்கு அதைப் பற்றி கவலை எதுவும் இல்லை.
சொல்வதெல்லாம் உண்மை: ஏனென்றால் நான் ஒரு பேட்டி கொடுக்கிறேன் என்றால் அந்தப் பேட்டியில் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று நினைப்பேன். காதல் ஒருமுறைதான் வரும் என்றெல்லாம் எந்த விதிமுறையும் கிடையாது. அது சாகும்வரை வந்துகொண்டே இருக்கும். ஆனால் அந்தக் காதல் யார் மீது வருகிறது என்பதைத்தான் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு காதல் முடிந்துவிட்டால் வாழ்க்கை முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. காதலுக்காக நான் எந்தத் தற்கொலை முயற்சியும் செய்துகொள்ளவில்லை. கையை அறுத்துக்கொண்டதும் இல்லை. ஆனால் எனது காதலர்கள் எனக்காக கையை அறுத்திருக்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











