ஷகிலா நடிச்சாலே அது அந்தமாதிரி படம் தானா? பல இயக்குநர்கள் அவாய்ட் பண்ணாங்க.. மனம் குமுறிய ஷகிலா!
சென்னை : பல இயக்குநர்கள் என்னை அவாய்ட் செய்தார்கள் என்று நடிகை ஷகிலா பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி உள்ளார்.
மலையாளத் திரைப்படமான ப்ளே கேள்ஸ் திரைப்படத்தின் துணை நடிகையாக அறிமுகமானார் ஷகிலா.
ஆபாசப்படங்களில் நடித்து நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சேர்ந்துக் கொண்டு புகழின் உச்சிக்கே சென்றவர் ஷகிலா.

நடிகை ஷகிலா
90களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் , கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டி பறந்தவர் ஷகிலா. அக்கால கட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்களை விட இவரது படங்கள் நன்றாக கல்லா கட்டியது. ஷகிலா கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆபாச படங்களில் மட்டுமே நடித்து வந்த ஷகிலா, குணசித்திர வேடம், நகைச்சுவை கதாபாத்திரம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

குக் வித் கோமாளியில்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்துவைத்தார் ஷகிலா. ரசிகர்கள் அவர் மேல் வைத்திருந்த கண்டோட்டத்தையே இந்த நிகழ்ச்சி மாற்றி அவர் மீது தனி மரியாதையே வந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மட்டுமில்லாமல் இளைஞர் மற்றும் குழந்தைகள் அவரை மம்மி என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். தற்போது அவர், பிரபல யூடியூப் சேனலில் தொகுப்பாளராக இருக்கிறார்.

ஷகிலா பேட்டி
இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஷகிலா வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசி உள்ளார். இதில், 90களில் மிகவும் பிஸியாக இருந்தேன் ஒரு கட்டத்தில் படவாய்ப்பு இல்லாமல் போனதால், கேம் விளையாடினேன், நாய் குட்டியை கவனித்துக்கொண்டு இருந்தேன். ஷகிலாவை படத்தில் நடிக்க வைத்தால், படத்தின் நிறம் மாறிவிடும், அதாவது Blue filmமாகிவிடும் என்று பல இயக்குநர்கள் என்னை புறக்கணித்தனர். ஷகிலா நடிச்சாலே அது அந்தமாதிரி படமாகிவிடுமா? எப்படி ஆகும் என்றார்.

யாருக்கும் நோ சொல்லமாட்டேன்
அப்போது தான், தெலுங்கு ஜெயம் படத்திற்காக இயக்குநர் தேஜா ரவியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவரை கடவுளின் அவதாரம் என்று தான் சொல்ல வேண்டும் அதன் பிறகு தான் தெலுங்கு, தமிழ் படங்களில் அடுத்தடுத்து சின்ன சின்ன கதாபாத்திரங்கள் நடிக்க வாய்ப்பு வந்தது. மேலும், என்னிடம் இருக்கும் கெட்டப்பழக்கம் எனக்கு யார் கிட்டையும் நோ சொல்ல வராது, யார் என்ன உதவி கேட்டாலும், கடன் வாங்கியாவது உதவி செய்வேன்.இதனால் பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன்.

மனம் திறந்த பேட்டி
எதையாவது சேர்த்து வைத்து இருக்கிறேன் என்று பார்த்தால் எதுவுமே இல்லை, இருக்கிற பணத்தை வைத்து வாழ்த்து கொண்டு இருக்கிறேன். கடவுள் எனக்கு கொடுத்த அருள் மட்டும் தான் என்னிடம் இருக்கு. செக்ஸ் குயினாக பல படங்களில் நடித்த என்னை யாரும், அவதூராகவோ, அசீங்கமாகவோ இதுவரை பேசியது இல்லை. அனைவருமே என்னை குடும்பத்தில் ஒருத்தியா பார்க்கிறார்கள் அதுதான் என் சொத்து என்று நினைக்கிறேன் என நடிகை ஷகிலா மனம் திறந்து பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











