300 பேர் முன்னாடி மேலாடை கிழிந்தது.. என்ன நடந்தது தெரியுமா?.. ஷகீலா கொடுத்த ஷாக்

சென்னை: நடிகை ஷகீலா மலையாள திரையுலகில் ரொம்பவே ஃபேமஸாக இருந்தவர். தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பது, சில யூட்யூப் சேனல்களுக்காக பேட்டி எடுப்பது என பிஸியாக இருக்கிறார். இந்தச் சூழலில் தனது முதல் படத்தில் ஏற்பட்ட அவமானம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார் ஷகீலா.

இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ஷகீலா. 1995ஆம் ஆண்டு பிளே கேர்ள்ஸ் என்ற படத்தின் மூலம் தனது 16ஆவது வயதில் திரையுலகில் நுழைந்தார். ப்ளே கேர்ள்ஸ் திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா ஹீரோயினாக நடித்திருந்தார். அவருக்கு தங்கையாக ஷகீலா நடித்திருந்தார். அடல்ட் படமாக உருவாகியிருந்ததால் முதல் படத்திலிருந்தே அடல்ட் நடிகை என்ற முத்திரை ஷகீலா மேல் குத்தப்பட்டது.

Actress Shakeela Talks about her First Movie Experience

பயந்த ஹீரோக்கள்: ஷகீலா நடித்த கின்னாரா தும்பிகள் என்ற படம் 100 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. அந்த சமயத்தில் ஒரு கவர்ச்சி நடிகையின் படம் எப்படி 100 நாள்கள் ஓடியது என்றுதான் ஆச்சரியப்பட்டார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி ஷகீலாவும் அதை நினைத்து ரொம்பவே ஆச்சரியம்தான் பட்டார். அதுமட்டுமின்றி ஷகீலாவுக்கு இருக்கும் க்ரேஸை பார்த்து மலையாளத்தின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால் ஆகியோரே கொஞ்சம் பயந்துபோனார்கள் என்ற பேச்சும் எழுந்தது உண்டு.

குக் வித் கோமாளி: ஷகீலா என்றாலே கவர்ச்சி நடிகை என்ற அடையாளம்தான் பலருக்கும் இருந்தது. ஆனால் அவர் விஜய் டிவியில் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அவருக்குள் இருக்கும் மிகச்சிறந்த மனிதியை அனைவருமே தெரிந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் அவர் சக போட்டியாளர்களால் அம்மா என்றே அழைக்கப்பட்டார். மேலும் ஷீத்தல் என்ற திருநங்கையையும் அவர் தத்து எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஒதுங்கிய ஷகீலா: ஷகீலா தனது வாழ்க்கையில் ஏகப்பட்ட காதல் தோல்விகளை சந்தித்தவர். அதனை அவரே சொல்லியும் இருக்கிறார். சமீபத்தில்கூட ஒரு தகவலின்படி அவர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் மீது சிறு வயதில் காதலில் இருந்ததாகவும் பேச்சு ஒன்று ஓடியது. காலங்கள் செல்ல செல்ல ஷகீலாவிற்கான பட வாய்ப்புகள் குறைந்தன. இதனையடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மேலும் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி அளித்துவருகிறார். சொந்தமாக யூட்யூப் சேனலையும் நடத்திவருகிறார்.

ஷகீலா பேட்டி: இந்நிலையில் அவரும் நடிகை கிரணும் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு சேர்ந்து பேட்டி கொடுத்தனர். அப்போது பேசிய ஷகீலா,"சில்க் ஸ்மிதா நடித்த படத்தில்தான் நான் சினிமாவில் அறிமுகமானேன். அப்போது எனக்கு 16 வயது. படத்தின் ஒரு காட்சியில் நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டும். அந்தப் படத்தின் என்னுடன் தங்கையும் நடித்தார். அவரும் என்னைத் தொடர்ந்து நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டும். எங்கள் இருவருக்குமே நீச்சல் தெரியாது. முதலில் நான் குதித்துவிட்டேன்.

மேலாடை அவிழ்ந்தது: எனக்கு பிறகு அவரும் குதித்தார். அவர் குதித்தபோது என் மேல் குதித்துவிட்டார். உடனடியாக அவர் மேலே வந்துவிட்டார். ஆனால் நானோ உள்ளே சென்றுவிட்டேன். எப்படியாவது மேலே வந்துவிட வேண்டும் என்று என்னென்னமோ செய்துகொண்டிருக்கிறேன். ஆனால் என்னால் முடியவில்லை. அப்போது ஸ்பாட்டில் இருந்த ஒருவர் உடனடியாக குதித்து என்னை மேலே கொண்டு வந்தார்.

அந்த சமயத்தில் நான் அணிந்திருந்த பிகினி உடையில் மேலாடை கிழிந்துவிட்டது. நான் தண்ணீருக்கு மேலே வரும்போது என்னிடம் மேலாடை இல்லை. இந்த சம்பவம் நடந்தபோது ஏதோ நிகழ்ச்சி நடந்தது. அதனால் ஷூட்டிங் நடந்த ரெசார்ட்டில் 300 பேர் இருந்தார்கள். அவர்கள் அனைவருமே என்னை பார்த்தார்கள். எனக்கு அவமானமாகிவிட்டது. யாரோ ஒருவர் திடீரென அந்தக் கூட்டத்திலிருந்து ஒரு துணியை தூக்கி என் மேல் வீசினார். அதை போர்த்திக்கொண்டு நான் ரூமுக்கு சென்றுவிட்டேன். அதை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X