Shakila : வளர்ப்பு மகளுடன் ஷகிலா.. மிலாவின் உருக்கமான பதிவு!
சென்னை: மலையாள ஆபாச படத்தில் நடித்து வந்த ஷகிலா, பின்னாளில் மலையாள சினிமாவின் டாப் நடிகையாக மாறினார். 90 கால கட்டத்தில் நடிகை ஷகிலா பல கவர்ச்சிப் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்து இருந்தார். பின் நாளில் ஆபாச படங்களின் நடிப்பதை தவிர்த்துவிட்டு, விஜய், அஜித், சிம்பு உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களின் படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
திருமணம் செய்யாமல் தனிமையில் வாழ்ந்து வந்த ஷகிலா, மிலா என்ற திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வந்தார். அண்மையில் அவரது வளர்ப்பு மகள் மிளா ஷகிலா வீட்டை விட்டு வெளியேறியதாக செய்தி வெளியானது. ஆனால், தற்போது மிலா தனது இன்ஸ்டாகிராமில் ஷகிலாவுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

மகளுடன் ஷகிலா: நடிகை ஷகிலா தனது வளர்ப்பு மகளான மிலாவுடன் வாழ்ந்து வந்தார். ஆனால், திடீரென மிலா அவரை விட்டு பிரிந்து சென்றார். ஷகிலா மிலாவை மிஸ் யூஸ் செய்தார். அதனால் தான் அவர் சென்றுவிட்டார் என்கிற அளவுக்கு பேச்சுக்கள் வந்த நிலையில், யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த மிலா, எனக்கும் ஷகிலாவுக்கும் எந்தவித சண்டையும் இல்லை. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. இதனால் தான் ஷகிலா வீட்டை விட்டு வெளியேறினேன். நான் ஷகிலாவின் வீட்டிற்கு சென்றபோதே ரூ.10 லட்சம் பணம், ரூ.15 லட்சம் காருடன் தான் சென்றேன். நான் ஏழை கிடையாது என பேசி இருந்தார். இந்நிலையில், மிலா தனது இன்ஸ்டாகிராமில் ஷகிலாவுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவில் இருவரும் ஷிஜாப் அணிந்து இருக்கின்றனர். மேலும் அதில், ஜூம்மா பராக் இந்த இனிமையான நாளில் அம்மாவை சந்தித்தேன் என பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவைற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











