ஷகீலாவுக்கு தண்டனை கிடைக்குமா?...ஆபாசப் பட வழக்கில் விரைவில் 'ஜட்ஜ்மென்ட்'!

பாளையங்கோட்டையில் உள்ள சினிமா தியேட்டரில் கடந்த 26-8-2003ம் ஆண்டு நடிகை ஷகிலா, நடிகர் தினேஷ் நடித்த இளமை கொண்டாட்டம் என்ற படம் ஓடியது. இதில் ஆபாச காட்சிகள் காட்டப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாளை போலீசார் தியேட்டருக்கு சென்று ஆபாச காட்சிகள் ஒளிப்பரப்புவதை கண்டுபிடித்து படச்சுருளை கைப்பற்றினார்கள்.
இது தொடர்பாக தியேட்டர் மேலாளர் பாஸ்கரன், ஆபரேட்டர் பரமசிவன், ஊழியர்கள் வசிகரன், சிவசுப்பிரமணியன் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் படத்தில் ஆபாசமாக நடித்த நடிகை ஷகிலா, நடிகர் தினேஷ் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செயயப்பட்டது. இவ்வழக்கு விசாரணை நெல்லை குற்றவியல் முதலாவது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நடிகை ஷகிலா, நடிகர் தினேஷ் மற்றும் தியேட்டர் ஊழியர்கள் உள்பட 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜாராகினர். நீதிபதி (பொறுப்பு) ராபின்சன் ஜார்ஜ் வழக்கை வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை அனைத்தும் முடிந்துள்ள நிலையில் விரைவில் தீர்ப்பு கூறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபாசப் படத்தில் நடித்ததாக நிரூபணமானால் ஷகீலாவுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











