என்ன யாரு கல்யாணம் பண்ணிப்பா.. கல்யாணமே நடக்காது.. டிடிஎப் வாசனுடன் கிசுகிசுக்கப்பட்ட ஷாலின் சோயா!
சென்னை: சர்ச்சைக்குரிய யூடியூபரான டிடிஎப் வாசனின் காதலி என கிசுகிசுக்கப்பட்டு வந்த ஷாலின் ஜோயா விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். தற்போது அவர் அளித்து இருக்கும் பேட்டியில் என்னை எல்லாம் யாரு கல்யாணம் பண்ணிப்பா என பேசி உள்ளார்.
கேரளாவில் பிறந்த நடிகை ஷாலின் ஜோயா, குழந்தை நட்சத்திரமாக மலையாளத் திரைப்படமான ஷோபிஸில் படத்தில் நடித்தார். அந்த படத்தை தொடர்ந்து, 'ஆட்டோகிராப்' படத்தில் நடித்து புகழ் பெற்றார். பின் ' எல்சம்மா என்ன ஆங்குட்டி ', 'மல்லு சிங்', 'கர்மயோதா', 'ரெபேக்கா ஊதுப் கிழக்கேமாலா','விசுதன்' 'தமகா' ஆகிய படத்தில் நடித்தார். மலையாளத் படத்தில் நடித்து வந்த ஷாலின் ஜோயா, கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "ராஜா மந்திரி" படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து "கண்ணகி" என்கிற படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஷாலின் ஜோயா: திரைப்படத்தில் நடித்த ஷாலின் ஜோயா, விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்டார். தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். தற்போது இவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், எனக்கு எல்லாம் கல்யாணமே ஆகாது, என்னை எல்லாம் யாருங்க கல்யாணம் பண்ணிப்பா, காதலிப்பதற்கான ஆளும் நான் இல்லை, கல்யாணத்திற்கான ஆளும் நான் இல்லை. என்னை கல்யாணம் பண்ணிக்கிறவன் ரொம்ப கஷ்டப்படுவான், என்னுடைய யோசனை முழுக்க சினிமாவை பற்றித்தான் இருக்கு, கல்யாணம் என்பது எனக்காக விஷயமாக நான் நினைக்கவே இல்லை. இதனால், வருங்காலத்தில் கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணமே எனக்கு இல்லை என ஷாலின் ஜோயா என திருமணம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
காதல் கிசுகிசு: யூடியூபரான டிடிஎப் வாசனை ஷாலின் யோஜா காதலித்து வருவதாக சொல்லப்பட்டது, இருவரும் ஜோடியாக இருக்கும் வீடியோக்களும் வெளியானது. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என வதந்திகள் பரவி வந்த நிலையில் வாசன், மாமா பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











