பிறந்தநாளும் அதுவுமா ஷாலினியிடம் உருக்கமான கோரிக்கை வைத்த தல ரசிகர்கள்!

ஷாலினி அஜித்துக்கு இன்று 39வது பிறந்தநாள்.

Recommended Video

ஷாலினி பிறந்தநாளுக்கு உருக்கமான கோரிக்கை வைத்த தல ரசிகர்கள்- வீடியோ

சென்னை: நடிகை ஷாலினி அஜித்குமார் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரிடம் அஜித் ரசிகர்கள் வாழ்த்துக்களோடு, பல கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக உயர்ந்தவர் ஷாலினி. கதாநாயகியாக ஒரு சில படங்களே நடித்திருந்த போதும், இன்றளவும் ரசிகர்கள் கொண்டாடும் திறமையான நடிகை என பெயர் எடுத்தவர்.

அமர்களம் படத்தில் நடித்த போது அஜித்துடன் காதல் வயப்பட்டு, திருமணம் செய்து கொண்டார். பின்னர் நடிப்பதில் இருந்து விலகிக்கொண்டார்.

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நட்சத்திர ஜோடிகளில் அஜித் - ஷாலினி தம்பதிக்கு முக்கிய இடமுண்டு. இந்த தம்பதிக்கு அனோஷ்கா, ஆதிவ் என இரு குழந்தைகள் உள்ளனர்.

39வது பிறந்தநாள்:

39வது பிறந்தநாள்:

இந்நிலையில் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ஷாலினி. அவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்கள் ஹெஷ்டேக் போட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களில் ஒரு சில ரசிகர்கள், பிறந்தநாள் வாழ்த்துகளோடு வித்தியாசமான கோரிக்கைகளையும் ஷாலினியிடம் முன்வைத்துள்ளனர்.

ப்ளீஸ் அண்ணி:

இந்த ரசிகர், "என்ன தான் தமிழ் நாட்டுக்கே 'தல' யா தல அஜித் இருந்தாலும் எங்க ஷாலினி அண்ணி பேச்சுக்கு மட்டும் கட்டுப்படுவாரு'ல... ஒரு வேண்டுதல் தல'ய ரிஸ்க் எடுக்க வேணாம்னு சொல்லுங்க அண்ணி . பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணி", என தெரிவித்துள்ளார்.

ஷாலினியும் காரணம்:

இதேபோல் இந்த ரசிகர், ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார். அதுபோல, அஜித்தின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் பெண் ஷாலினி என புகழ்ந்துள்ளார்.

வாழ்த்துக்கள்:

"பால்ய காலத்தில் இருந்து எனக்கு மிகவும் பிடித்த நடிகை ஷாலினி. பிறந்தநாள் வாழ்த்துகள். காதலுக்கு மரியாதை, அலைபாயுதே படங்களில் அவருடைய வெள்ளந்தியான நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்" என இந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.

வீடியோவுடன் வாழ்த்து:

ஜெர்மனியை சேர்ந்த ரஜினி ரசிகரான இவர், ஷாலினி குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது ரஜினியுடன் நடித்த காட்சியை பதிவிட்டு பிறந்தாள் வாழ்த்து கூறியுள்ளார். இதன் மூலம் ஷாலினிக்கு இங்கு மட்டுமல்ல, ஜெர்மனியிலும் ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிய வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X