ஷாலினிக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை : பிரபல நடிகையும் அஜித்குமாரின் மனைவியுமான ஷாலினி, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ஆண்டு வந்தார்.

மலையாளம் தெலுங்கு என பல மொழிகளில் எண்ணற்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அனைவரையும் கவர்ந்த இவர் "அனியதி ப்றவு" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இவ்வாறு திரைத்துறையில் வெற்றிகரமாகவும் பிரபலமாகவும் உள்ள நடிகை ஷாலினி நவம்பர் 20ம் தேதியான இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதை யொட்டி சமூக வலைதளங்களில் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

தங்கை ஷாமிலி உடன்

தங்கை ஷாமிலி உடன்

நடிகை ஷாலினி ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் தெலுங்கு மலையாளம் என எண்ணற்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அனைவரும் விரும்பும் சுட்டிப் பெண்ணாக வலம் வந்து தங்கை ஷாமிலி உடன் இணைந்து ஒரு கலக்கு கலக்கி வந்தார்.

காதலுக்கு மரியாதை

காதலுக்கு மரியாதை

அதைத் தொடர்ந்து 1997-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான "அனியதி ப்றவு" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஷாலினிக்கு முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய, பின் அந்தத் திரைப்படம் தமிழில் "காதலுக்கு மரியாதை" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அதிலும் ஷாலினி கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

திருமணத்தில் முடிந்தது

திருமணத்தில் முடிந்தது

காதலுக்கு மரியாதை திரைப்படத்தை தொடர்ந்து அவர் அடுத்தடுத்து நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று வர முன்னணி நடிகை தரவரிசை பட்டியலில் முன்னேறிய ஷாலினி அமர்க்களம் திரைப்படத்தில் அஜீத் குமாருடன் இணைந்து நடித்தபோது ஏற்பட்ட காதல் பின் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது.

பிளாக்பஸ்டர் மூவி

பிளாக்பஸ்டர் மூவி

தமிழில் சில திரைப்படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இன்று வரை அனைவராலும் விரும்பப்படும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஷாலினி கடைசியாக பிரசாந்துடன் இணைந்து "பிரியாத வரம் வேண்டும் " என்ற பிளாக்பஸ்டர் மூவியில் நடித்திருந்தார்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

அலைபாயுதே, அமர்க்களம், பிரியாத வரம் வேண்டும, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு என இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் இன்றளவும் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நவம்பர் 20 ஆம் தேதியான இன்று ஷாலினி தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரைப் பிரபலங்கள், தல ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X