ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்..ஷாலினி இஸ் ஆல்வேஸ் க்யூட்டஸ்ட் ஸ்டார் வர்ணிக்கும் ரசிகர்கள்!

மும்பை : அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான ஷாலினி பாண்டே க்யூட்டான சிரிப்பாலும் வசீகரிக்கும் கன்னக்குழி அழகாலும் பல ரசிகர்களை பெற்று வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தி, தமிழ் என பல மொழிகளில் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பல விதவிதமான போட்டோக்களை பகிர்ந்து வரும் ஷாலினி பாண்டே தற்பொழுது பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முதல் படத்திலேயே

முதல் படத்திலேயே

திரைப்படத் துறையை பொறுத்தவரை பல நடிகைகளுக்கு பல படங்களில் நடித்த பின்பும் கிடைக்காத பெயர் ஒரு சில நடிகைகளுக்கு முதல் படத்திலேயே கிடைத்துவிடும். அந்த வகையில் ஷாலினி பாண்டே அறிமுகமான முதல் படத்திலேயே ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் மிகவும் பரிச்சயமானார்.

ஆட்டிப் படைத்தது

ஆட்டிப் படைத்தது

உண்மையான காதலை அழுத்தம் திருத்தமாகவும், பல வேதனைகள் வலிகள் நிறைந்த எதிர்பாராத திருப்பங்களை கொண்டதாகவும் உருவாகியிருந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியாகி தெலுங்கு திரைப்படத் துறையை மிகப்பெரிய வெற்றியின் மூலம் ஆட்டிப் படைத்தது.

சூப்பர் டூப்பர்

சூப்பர் டூப்பர்

உண்மையான காதலை அழுத்தம் திருத்தமாகவும், பல வேதனைகள் வலிகள் நிறைந்த எதிர்பாராத திருப்பங்களை கொண்டதாகவும் உருவாகியிருந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியாகி தெலுங்கு திரைப்படத் துறையை மிகப்பெரிய வெற்றியின் மூலம் ஆட்டிப் படைத்தது.

கபீர் சிங்

கபீர் சிங்

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரிலும் ஹிந்தியில் கபீர் சிங் என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றியடைந்தது. எனினும் விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டேவின் மார்க்கெட் அர்ஜுன் ரெட்டி படத்திற்குப் பின் எங்கேயோ போனது.

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா

இதில் விஜய் தேவரகொண்டா தற்பொழுது இந்திய அளவில் உற்றுநோக்கப்படும் நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் நிலையில் ஷாலினி பாண்டே தெலுங்கு திரைப்படத் துறையை தொடர்ந்து தமிழ், ஹிந்தி என பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

100% காதல்

100% காதல்

தமிழில் 100% காதல் மற்றும் கொரில்லா போன்ற படங்களில் நடித்து வந்த ஷாலினி தற்பொழுது உள்ள லாக் டவுன் சூழலில் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாததால் விதவிதமான போட்டோக்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பதிவிட்டுள்ள போட்டோக்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

மகிழ்ச்சியான இடம்

மகிழ்ச்சியான இடம்

எப்போதும் சிறிது கவர்ச்சி காட்டிய போட்டோக்களை பதிவிட்டு வரும் ஷாலினி தற்போது ஒரு மரத்தின் அடியில் குத்த வைத்து உட்கார்ந்து கொண்டு க்யூட்டான ஸ்மைலில் பதிவிட்டுள்ள அந்த போட்டோவில் தன்னுடைய மகிழ்ச்சியான இடம் இதுதான் என கூறி இருக்கிறார்.

பாராட்டுகளையும் காதலையும்

பாராட்டுகளையும் காதலையும்

இந்த க்யூட்டான மற்றும் ஹேப்பியான போட்டோவை பார்த்த ரசிகர்கள் வழக்கம்போல் பாராட்டி வரும் நிலையில் அதில் ஒருவர்" ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் ஷாலினி இஸ் ஆல்வேஸ் க்யூட்டஸ்ட் ஸ்டார்" என தனது பாராட்டுகளையும் காதலையும் பாடலின் மூலமாக தெரிவித்துள்ளார் அந்த தீவிரமான ரசிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X