இணையதளத்தை ஹாட்டாக்கும் அர்ஜுன் ரெட்டி ஷாலினி பாண்டே!
சென்னை: அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்து தென்னிந்திய ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் நடிகை ஷாலினி பாண்டே.
தமிழில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக 100% காதல் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார்.
இப்பொழுது இந்தி பட உலகிலும் கால் தடத்தை பதித்து வரும் ஷாலினி ரெட் ஹாட் உடையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படங்கள் இணையதளத்தை கலக்கி வைரலாகிறது.

அறிமுக திரைப்படம்
தென்னிந்தியாவின் யூத் ஐகானாக இருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே. நடித்த முதல் படத்திலேயே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களைப் பெற்றார். அறிமுக திரைப்படம் என்ற எந்த ஒரு சாயலும் இல்லாமல் அந்த கதாபாத்திரத்திற்கு மேலும் மெருகூட்டிய ஷாலினி பாண்டே அர்ஜூன் ரெட்டி வெற்றிக்கு பிறகு தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார். பின் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றியும் பெற்றது.

இரண்டாவது கதாநாயகியாக சிறப்பு தோற்றத்தில்
இந்த நிலையில் தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப தமிழிலும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக 100% காதல் திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமான இவருக்கு அந்த படம் பெரிதாக கைகொடுக்கவில்லை. அடுத்ததாக வெளியான கொரில்லா படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. இந்த நிலையில் கடைசியாக வெளியான நிசப்தம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவானது. மாதவன் அனுஷ்கா என பலர் நடித்திருந்த இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

பாலிவுட்டில் கவனம்
தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து வந்தாலும் அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு ஷாலினி பாண்டேவுக்கு எதிர்பார்த்தபடி எதுவும் வெற்றி படமாக எதுவும் அமையவில்லை. இந்த நிலையில் இப்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் ஜயீஸ்பாய் ஜோர்தார் மற்றும் மகாராஜா என இரண்டு படங்களில் கைவசம் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
Recommended Video

ஹாட்டான டிரஸ்ஸில் படுகவர்ச்சியாக போஸ்
கன்னக்குழி அழகு, அலட்டிக்கொள்ளாத நடிப்பு, க்யூட்டான நடிகை என ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ள ஷாலினி பாண்டே இப்பொழுது சமூக வலைதளங்களிலும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வருகிறார். முன்பு இருந்ததை விட இப்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். சமூக வலைதளங்களில் அதிக ஆக்டிவாக இருக்கும் ஷாலினி பாண்டே இப்பொழுது சிகப்பு ஹாட்டான டிரஸ்ஸில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையதளத்தை ஹாட்டாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











