அரை டிரவுசரில் ஹாயா காலை நீண்டி.. ஷாலினி பாண்டேவின் கலக்கல் போஸ்!

மும்பை : தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய முத்திரையை இந்திய அளவில் பதித்த நடிகை ஷாலினி பாண்டே தற்பொழுது பல மொழிகளில் நடித்து வருகிறார்.

படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஷாலினி பாண்டே இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களிலும் வித்தியாசமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் புல் தரையின் மீது கேட்பாரற்று கிடக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிரித்த முகத்துடன்

சிரித்த முகத்துடன்

திரைப்படங்களில் அறிமுகமாகும் ஒவ்வொரு கதாநாயகிகளும் தனக்கான சிறப்பான தனித்துவங்களை கொண்டு அறிமுகமாகி வருகின்றனர். அவ்வாறு கன்னக்குழி அழகுடன், எப்போதும் சிரித்த முகத்துடன் மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகின் மூலம் பல ரசிகர்களை கொண்டு வெற்றி நாயகியாக வலம் வருபவர் நடிகை ஷாலினி பாண்டே.

அர்ஜுன் ரெட்டி

அர்ஜுன் ரெட்டி

இந்தியாவில் பல மொழி திரைப்படத் துறையையும் வியப்பில் ஆழ்த்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான ஷாலினி பாண்டே தற்பொழுது தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளிலும் வளர்ந்து வரும் நாயகியாக நடித்து வருகிறார்.

ரீமேக் செய்யப்பட்டு

ரீமேக் செய்யப்பட்டு

இவ்வாறு விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரிலும் மற்றும் ஹிந்தி மொழியில் கபீர் சிங் என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

துருவ் விக்ரமிற்கு

துருவ் விக்ரமிற்கு

தமிழ் திரைப்படத் துறையில் சிறந்த நடிகராக விளங்கி வரும் விக்ரம் தனது மகனை முதன் முதலாக அறிமுகம் செய்த அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான ஆதித்யா வர்மா துருவ் விக்ரமிற்கு நல்ல ஒரு தொடக்கமாக அமைந்தது. அதேபோன்று ஹிந்தியில் மிகப் பெரிய நடிகராக வலம் வரும் ஷாகித் கபூர் அர்ஜுன் ரெட்டி ஹிந்தி ரீமேக்கான கபீர் சிங்கில் நடித்து அனைவரையும் மிரட்டி இருப்பார்.

100% காதல்

100% காதல்

அர்ஜுன் ரெட்டி படத்தில் ஷாலினி பாண்டேவின் நடிப்பு மிகப் பிரபலமாக பேசப்பட்ட நிலையில் அடுத்தடுத்து வாய்ப்புகள் இவருக்கு பல மொழிகளிலிருந்தும் வந்தன. இந்நிலையில் இவர் தமிழில் ஜி.வி பிரகாஷ் உடன் 100% காதல் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் செய்யப்பட்டார். 100% காதல் படத்தை தொடர்ந்து ஜீவாவுடன் கொரில்லா என்ற படத்திலும் நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில்

இன்ஸ்டாகிராமில்

மேலும் இவர் நடித்த நிசப்தம் என்ற திரைப்படம் தற்போது வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது. மேலும் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் பல படங்களில் நடித்து அந்த படங்கள் வெளியாக காத்திருக்கின்ற நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

குட்டி ஆடையில்

குட்டி ஆடையில்

யாருமற்ற இடத்தில் வெறும் புல்தரையில், குட்டி ட்ரவுசருடன் ஹாயாக காலை நீண்டி படுத்துக்கொண்டுள்ளார். கையில் புத்தகத்துடன் இளம் வெயிலில் படுத்திருக்கும் ஷாலினியை பார்த்து பலரும் பரிதாபப்பட்டு வரும் நிலையில் பலர் இவரையும், இவரது அழகான கால்களையும் வர்ணித்து வருவதோடு அழகுக்கு நீங்கள் தான் டெபனிஷின் என்றும் சொல்லி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X