நடிகைக்கு லிப்லாக் கொடுத்த பிரபல நடிகை.. புதிய படத்தில் லெஸ்பியனாக நடிக்கிறாரா?.. வைரலாகும் வீடியோ!
இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் நடிகை ஷாலு ஷம்மு லெஸ்பியன் வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னை: இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஒரு பெண்ணுக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டு அதிர வைத்துள்ளார் நடிகை ஷாலு ஷம்மு.
சாந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான செக்ஸ் காமெடி படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. கவுதம் கார்த்திக், ஷா ரா, யாஷிகா ஆனந்த், வைபவி ஷாந்தில்யா ஆகியோர் நடித்த இந்த படம் கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று.
விமர்சகர்கள் கழுவிக்கழுவி ஊற்றினாலும், வசூல் மழை பொழிந்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை கடன் பிரச்சினையில் இருந்து காப்பாற்றிய படம் இது. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு, இதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்கள்.

இயக்குனர் சந்தோஷ்
இதில் படத்தின் இயக்குனர் சந்தோஷ் நாயகனாக நடிக்கிறார். நடிகராக அவர் அறிமுகமாகும் முதல் படமும் இது தான். இந்த படத்தில் அவருக்கு நண்பராக டேனி போப் நடிக்கிறார்.

டேனி ஜோடி ஷாலு ஷம்மு
பல படங்களில் துணை நடிகையாக நடித்து வந்த ஷாலு ஷம்மு இந்த படத்தில் டேனிக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், ரீத்திகா அசோக் என்பவரும் இதில் நடிக்கிறார்.

லிப் லாக் முத்தம்
இஅமுகு 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு பங்களாவில் நடந்து வருகிறது. அப்போது ஷாஷ ஷம்முவும், ரீத்திகாவும் லிப் லாக் கொடுத்துக்கொள்கின்றனர். இதனை டேனி போப் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

படப்பிடிப்பு அட்ராசிட்டிகள்
அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதிர வைத்துள்ளார் ஷாலு ஷம்மு. மேலும் படப்பிடிப்பு தளத்தில் டேனி, சந்தோஷ் செய்யும் அட்ராசிட்டிகளையும் வீடியோ எடுத்து அவர் பதிவிட்டுள்ளார்.

லெஸ்பியன் கேரக்டரா
வழக்கமாக பப்பில் டான்ஸ் ஆடும் வீடியோ, கவர்ச்சியான புகைப்படங்கள் ஆகியவற்றை தான் ஷாலு வெளியிட்டு வந்தார். ஆனால் மற்றொரு பெண்ணுக்கு லிக் லாப் கொடுப்பதை வீடியோ எடுத்து வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இஅமுகு 2 படத்தில் அவர் லெஸ்பியனாக நடிக்கிறாரா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











