நீருக்கடியில் மோசமான உடையில் ஷாலு ஷம்மு... மாப்பிள்ளை பாக்குற நேரத்தில் என்ன இதெல்லாம் !

சென்னை : நடிகை ஷாலு ஷம்மு மோசமான உடையில் நடத்திய போட்டோஷூட் ரசிகர்கள் இடையே வைரலாகி வருகிறது.

ஓரிரு திரைப்படத்தில் அதுவும் கூட்டத்தோடு கூட்டமாக வந்து தலைக்காட்டி சென்ற ஷாலு ஷம்முவுக்கு இணையத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள்.

படவாய்ப்பு வந்தால் என்ன, வராவிட்டால் என்ன எனக்கு இருக்கவே இருக்கு போட்டோஷூட் என சோஷியல் வீடியாவில் புகுந்து விளையாடி வருகிறார் ஷாலு ஷம்மு

சூரியுடன்

சூரியுடன்

இயக்குர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் திவ்யாவின் தோழியாக நடித்திருந்தார் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் சூரியின் கேர்ள் ப்ரண்டாக நடித்து பிரபலமானார்.

ஒரு சில படங்களில்

ஒரு சில படங்களில்

அந்த திரைப்படத்தை அடுத்து நகுல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடித்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தம் திரைப்படத்தில் காமெடி நடிகர் சதீஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து பார்ட் 2வில் கிளுகிளுப்பான வேடம் கிடைத்தது. திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் படத்திலும் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

கவர்ச்சி வீடியோ

கவர்ச்சி வீடியோ

ஆரம்ப காலத்தில் ஒல்லியாக இருந்த ஷாலு ஷம்மு, இப்போது பார்ப்பதற்கு நல்ல பளபளப்பாக இருக்கிறார். சோஷியல் மீடியாவில் ரீல் வீடியோ போடுவது, போட்டோஷூட் நடத்துவது என படு பிஸியாகவே இருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கிறார். இவர் பதிவிடும் போட்டோ, வீடியோ எதுவானாலும் சரி சிறிது நேரத்திலேயே டிராண்டாகி வருகிறது.

நீருக்கடியில்

நீருக்கடியில்

சமீபத்தில் நீருக்கடியில் படுமோசமான உடையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவில், தண்ணீரில் மொத்தமும் நனைந்து மோசமாக போஸ் கொடுத்திருந்தார். மேலும், காதலர் தினத்திற்காக எடுத்த போட்டோஷூட் என்றும், தண்ணீரில் இருந்தபோது குளிரில் நான் அப்படியே நடுங்கி போனேன். ஆனால், புகைப்படத்தை பார்த்ததும் முற்றிலும் மகிழ்ச்சியடைந்தேன் என கூறியுள்ளார்.

கவர்ச்சி வேண்டாமே

கவர்ச்சி வேண்டாமே

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் பல கருத்துக்களை கூறி வருகின்றனர். ஒரு சில நலம் விரும்பிகள், ஷாலு கடந்த வருடமே மாப்பிள்ளை பார்ப்பதாக கூறினீர்கள். இதுபோன்ற நேரத்தில் அதீத கவர்ச்சி வீடியோ தேவைதானா என கேட்டு வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X