சிக்குன்னு சேலையில் கலக்கும் ஷாமிலி... அஜித் வீட்ல செம ஜோரான தீபாவளி!

சென்னை : குழந்தை நட்சத்திரமாக அனைவருக்கும் அறிமுகமாகி இப்போது கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஷாமிலி.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் ஓய் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தமிழில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து வீர சிவாஜி திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்நிலையில் சிக்குன்னு தளும்ப தளும்ப சேலையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கலங்க வைத்திருக்கும் ஷாமிலியின் இந்த சொக்கவைக்கும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

வலிமை படத்தின் அப்டேட்டை

வலிமை படத்தின் அப்டேட்டை

தமிழில் முன்னணி நடிகர்களில் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டு இருப்பவர் நடிகர் அஜித்குமார். எந்த விளம்பரங்களும் இல்லாத போதும் இவரது திரைப்படங்கள் திரையரங்குகளில் பல நாட்கள் ஓடி வசூலை வாரி குவித்து வரும் நிலையில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பலரும் வலிமை படத்தின் அப்டேட்டை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக

குழந்தை நட்சத்திரமாக

அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினியின் தங்கை ஷாமிலி தெலுங்கு தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் எண்ணற்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இப்பொழுது கதாநாயகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

வீரசிவாஜியில் கதாநாயகி

வீரசிவாஜியில் கதாநாயகி

அக்கா ஷாலினியைப் போலவே தானும் கதாநாயகியாக ஜொலிக்க வேண்டும் என எண்ணிய ஷாமிலி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் " ஓய்" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். தெலுங்கை தொடர்ந்து தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமான ஷாமிலி விக்ரம் பிரபு நடித்த வீரசிவாஜியில் கதாநாயகி அறிமுகத்தைக் கொடுத்தார்.

கடைசி திரைப்படம்

கடைசி திரைப்படம்

குழந்தை நட்சத்திரமாக கலக்கியதைப் போலவே, கதாநாயகியாகவும் ஷாமிலியை பல திரைப்படங்களில் பார்க்கவேண்டும் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இதுவரை சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு வெளியான "அம்மகாரில்லு" திரைப்படம் இவரது நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் ஆகும்.

தீபாவளி சிறப்பு போட்டோக்கள்

தீபாவளி சிறப்பு போட்டோக்கள்

இவ்வாறு கதாநாயகியாகவும் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்க உள்ள நடிகை ஷாமிலி இப்பொழுது சிக்குன்னு தளும்ப தளும்ப சேலையில் கொள்ளை அழகுடன் அம்சமாக நின்று கொண்டு வெளியிட்டுள்ள தீபாவளி சிறப்பு போட்டோக்கள் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருவதோடு பலரின் கனவுக் கன்னியாகவும் மாறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X