வண்ண வண்ண ஓவியம் வரையும் ஷாமிலி..அட அசத்துறீங்களே!
சென்னை : நான் நடிகை மட்டுமல்ல சிறந்த ஓவியரும் கூட என்பதை நிரூபித்து உள்ளார் நடிகை ஷாமிலி.
குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர் இப்பொழுது கதாநாயகியாகவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அக்கா ஷாலினி உடன் உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்ட ஷாமிலியின் புகைப்படங்கள் வைரலானது தொடர்ந்து பெயிண்டிங்கிள் அசத்தி உள்ள வீடியோ அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.

ஷாலினியின் தங்கையான
நடிகை ஷாமிலியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது இயக்குனர் மணிரத்னத்தின் அஞ்சலி உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ஷாமிலி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்து பிரபலமாக இருந்தவர். நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் தங்கையான இவர் கதாநாயகியாகவும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்
அஞ்சலியில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது வாங்கியுள்ள இவர் மலூட்டி, மாதி ஹடிடு கோகிலே போன்ற திரைப்படங்களுக்கு கேரளா மற்றும் கர்நாடக மாநில விருதுகளும் சிறந்த குழந்தை நட்சத்திரமாக பெற்றுள்ளார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக நடிப்பில் இருந்து சற்று விலகி படிப்பில் கவனம் செலுத்தி வந்தார் பெரிய பெண்ணாக வளர்ந்து தெலுங்கிக் ஓய் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். இதில் சித்தார்த் கதாநாயகனாக நடித்து இருப்பார் யுவன் சங்கர் ராஜா மியூசிக் அமைத்திருப்பார்.

ஒப்பந்தம் ஆகவில்லை
தமிழிலும் கதாநாயகியாக வீரசிவாஜி மூலம் என்றி கொடுத்த இவருக்கு அது வெற்றி தொடக்கமாக அமையும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் எதிர்பாராதவிதமாக படுதோல்வி அடைந்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு வெற்றி தொடக்கமாக எந்த ஒரு படங்களிலும் இவர் ஒப்பந்தம் ஆகவில்லை.

தலைவிரிக் கோலமாய்
இந்த நிலையில் சமீபத்தில் உறவினர் ஒருவரின் திருமணத்தில் அக்கா ஷாலினியுடன் கலந்துகொண்ட அவரது புகைப்படங்கள் செம வைரலானது தொடர்ந்து இதுவரை நடிகையாக மட்டுமே பார்த்து வந்த ஷாமிலி அட்டகாசமான ஓவியம் ஒன்றையும் வரைந்து அசத்தியுள்ளார். அதில் ஒரு பெண் தலைவிரிக் கோலமாய் கையை நெற்றியில் கைவைத்துக் கொண்டு இருக்க பார்க்கவே பிரமிப்பாக இருக்கும் இந்த ஓவியத்தைப் பார்த்த பலரும் ஷாமிலிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











