கவர்ச்சி கடலில் குதித்த ஷம்மு

காஞ்சிபுரம் படத்தில் அழகான ரோலில் நடித்து அனைவரையும் வியக்க வைத்தவர் ஷம்மு. அதேபோல தசாவதாரம், மாத்தி யோசி, மலையன் என நடித்து தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு இடத்துக்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
கவர்ச்சிக்கு இவரது உடல் வாகு ஒத்துவருமா என கோலிவுட்டில் சிலர் ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் இவரே சுவோமோட்டாவாக கவர்ச்சிகரமான ஸ்டில்களை கோலிவுட்டில் உலா விட்டுள்ளார். படு ஜில்லான அந்த ஸ்டில்கள் இப்போது பல்வேறு தயாரிப்பாளர்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறதாம்.
என்னாலும் முடியும் என்பதை இப்படி ஸ்டில்கள் மூலமாக ஜில் ஸ்டேட்மென்ட்டாக அறிவித்துள்ள ஷம்மு கவர்ச்சிகரமான ரோல்களுக்கும் தான் தயார் என்பதை மறைமுகமாக கோலிவுட்டாருக்கு சுட்டிக்காட்டியுள்ளாரம்.
கோலிவுட்டில் நிலவி வரும் கடும் போட்டியில், மங்களகரமாக இருப்பதை விட கவர்ச்சிகரமாக இருந்தால்தான் வண்டி ஓட்ட முடியும் என்ற முடிவுக்கு ஷம்மு வந்துள்ளதை நினைத்து சிலருக்கு பெரும் மகிழ்ச்சியாம்.
மலையாளம், தமிழ் தவிர, தெலுங்கு, இந்தி ஆகிய படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார் ஷம்மு. இந்த மொழிகள் அனைத்திலும் பேச, எழுதப் படிக்கத் தெரியும் என்பதால் ஷம்முவுக்கு நான்கு மொழிகளிலும் நடிக்க எந்தப் பிரச்சினையும் இல்லையாம்.


Click it and Unblock the Notifications











