மொட்டை அடித்தால் கேன்சரா?.. என் தலையில் என்ன இருக்கு தெரியுமா?.. காந்த கண்ணழகி சாந்தி பிரியா
சென்னை: கங்கை அமரன் இயக்கிய எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் சாந்தி பிரியா. இவர் தனது அக்கா பானுப்ரியா பாேன்றே காந்த கண்களால் வசீகரிக்க கூடியவர். பிரபு, ராமராஜன், சத்யராஜ் படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். இந்நிலையில், சாந்தி பிரியாவின் வித்தியாசமான கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் வியந்துள்ளனர். அதற்கு அவர் அளித்த பதிலும் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் முன்னணி நடிகையாக இருந்த அவர், பாலிவுட் நடிகர் சித்தார்த் ரேவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அழகான இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சித்தார்த்தை திருமணம் செய்துகொண்ட பிறகு சாந்தி பிரியா படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்த இவர் தற்போது பேட் கேர்ள் படத்தின் மூலம் தமிழில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் ஹீரோயினுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். மேலும், தற்போது மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

நான் நலமாக இருக்கிறேன்: நடிகை சாந்தி பிரியாவின் கணவர் சித்தார்த் ரேவ் கடந்த 2004ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார். இதன் பிறகு இரண்டு மகன்களை அவரே வளர்த்து வந்தார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அவர் சமீபத்தில் தலையில் முடி இல்லாமல் மொட்டை அடித்து போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த போட்டோஷூட்டில் இறந்த தனது கணவரின் கோட்டை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மொட்டை தலையுடன் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலில் பேட்டி அளித்த சாந்தி பிரியா, நான் மொட்டை அடித்ததை பார்த்து எனது அண்ணன் ஸ்கூல் படிக்கிற பொண்ணு மாதிரி இருக்க என்று தெரிவித்தார். பின்பு, ஒரு முக்கியமான செய்தியை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு உடல்நிலையில் எந்த பிரச்னையும் இல்லை. நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். மொட்டை அடிக்க தோன்றியது அடித்துகொண்டேன் என தெரிவித்தார்.
திருப்பதிக்கு மொட்டையா?: மேலும் பேசிய அவர், பெண்கள் எப்போதும் ஒரு ரூல்ஸை பாலோவ் செய்ய வேண்டும். நம்மை நாமே கூண்டுக்குள் அடைத்துக்கொள்கிறோம். நான் என்னை விடுவித்துக் கொண்டேன். மொட்டை அடிக்கும் போது சந்தேகம் இருந்தது. பட வாய்ப்புகள் கிடைக்குமா திரையுலகில் என்ன நினைப்பார்கள் என்று யோசித்தேன். ஆனால், மொட்டை அடித்த பின்பு தான் நிம்மதியாக இருப்பதை உணர்ந்தேன். ஒரு பெண் மொட்டை அடித்தால் பொதுவாக வேறு மாதிரி பேசுவார்கள். மனநிலை பிரச்னை என்றும் கூறுவார்கள். கொஞ்சம் பயம் இருந்தது. மொட்டை எடுத்த பிறகு என்ன நடந்தால் என்ன? எனது முடிவை நான் மாற்ற முடியாது என்பதை உறுதி செய்தேன். ஆனால், மொட்டை அடித்தால் கேன்சரா என்ற கேள்வியும் எழுந்தது.

குறிப்பாக பாலிவுட்டில் பலரும் நான் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மொட்டை அடித்து கொண்டதாகவும் தெரிவித்தனர். தென்னிந்தியாவில் இருந்து வந்த பெண் என்பதால் அப்படியும் நினைத்து கொண்டனர். நான் யாருக்கும் இதற்கான விளக்கம் அளிக்கவில்லை. அவரவர் விருப்பத்திற்கு என்ன வேண்டும் என்றாலும் பேசிக்கொள்ளட்டும் என விட்டுவிட்டேன் என சாந்தி பிரியா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











