ஒரே ஒரு போட்டோவ ஷேர் பண்ணி மொழி பிரச்சனையை உண்டாக்கிய நடிகை.. ரணகளமாகும் டிவிட்டர்!

சென்னை: நடிகை ஒருவர் ஷேர் செய்த போட்டோவால் டிவிட்டரில் ரசிகர்களுக்கு இடையே பெரும் மோதலே
வெடித்திருக்கிறது.

தமிழில் ஜெயம் ரவியுடன் பூமி என்ற படத்தில் நடித்து வருபவர் நடிகை நிதி அகர்வால். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் இவர் பூமி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார்.

இந்நிலையில் ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதாக கூறி ஒரு போட்டோவை ஷேர் செய்தார் நிதி அகர்வால். அதோடு என்ன மொழி என்று கண்டுபிடியுங்கள் என்றும் கூறியிருந்தார்.

தமிழ் மொழிதான்

தமிழ் மொழிதான்

இதனை பார்த்த நெட்டிசன்கள், உலகின் முதன்மையான மற்றும் தொன்மையான மொழியான தமிழ் என்றும் அனைத்து மொழிகளுக்கும் தாய் மொழியான தமிழ் என்றும் பெருமையாக டிவிட்டி வந்தனர். அப்போதே சில நெட்டிசன்கள் மொழிப் பிரச்சனையை கிளப்பாதீர்கள் என எச்சரித்திருந்தனர்.

கற்றுக் கொள்ளுங்கள்

கற்றுக் கொள்ளுங்கள்

இருப்பினும் சில நெட்டிசன்கள் சமஸ்கிருதம்தான் சிறந்த மொழி என்றும், சிலர் தெலுங்குதான் என்றும் அவரவர் மொழிகளை பெருமையாக பேசினர். சிலர் கன்னட மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்றும் சிலர் தெலுங்கு மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தினர்.

Recommended Video

Top Celebrities Quarantine | Lock Down Diaries
நெட்டிசன் டிவிட்

நெட்டிசன் டிவிட்

இதனை பார்த்த ஒரு நெட்டிசன், நாங்கள் அனைத்து மொழிகளையும் நினைத்து பெருமைப்படுகிறோம். எந்த மொழியும் உயர்ந்தது அல்ல. எந்த மொழியும் தாய் மொழியும் அல்ல என்று கூறியப்படியே சமஸ்கிருதம் தான் முதலில் தோன்றியது என்று ஒரே போடாக போட்டார்.

தெரிஞ்சுக்கிட்டு வாங்க

தெரிஞ்சுக்கிட்டு வாங்க

இதனால் கடுப்பான மற்ற நெட்டிசன்கள் அவரை கடுமையாக திட்டி தீர்த்தனர். மேலும் சமஸ்கிருதம் முதல் மொழியல்ல, நீங்கள் ஆராய்ந்து விட்டு விவாதிக்க வாருங்கள் என்று அட்வைஸ் செய்தனர்.

வயிற்றெரிச்சல்

வயிற்றெரிச்சல்

இதனால் வார்த்தை போர் முற்றவே, முதலில் மொழிப்போரை உருவாக்காதீர்கள் என்று கூறிவிட்டு நீயே அதனை ஆரம்பித்துவிட்டாய். தமிழ்தான் உலகின் தொன்மையான மொழி என கூற நீ விரும்பவில்லை, அதனால்தான் வயிற்றெரிச்சலில் சமஸ்கிருதம் என்று கூறுகிறாய் என ஒருவரை ஒருவர் சாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X