twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எல்லா பேய் படத்திலயும் ஒரு வீடு வரும்... அரண்மைப் பட பிரச்சினை தொடர்பாக ஷீலா விளக்கம்

    |

    சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை திரைப்படத்தில் ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் சாயல் இருப்பதில் தவறு இல்லை எனத் தெரிவித்துள்ளார் நடிகை ஷீலா

    சுந்தர்.சி நடித்து இயக்கி இருக்கும் அரண்மனை திரைப்படம் கடந்த வெள்ளியன்று திரைக்கு வந்தது. திகில் படமான இதில் ஹன்சிகா, ஆண்ட்ரியா மற்றும் லட்சுமிராய் ஆகியோர் நடித்துள்ளனர்.

    Actress Sheela clarifies about Aranmanai issue

    இந்நிலையில், பல வருடங்களுக்கு முன் வெளியான அயிரம் ஜென்மங்கள் படத்தின் சாயலில் அரண்மனைப் படம் தயாராகி இருப்பதாக எம்.முத்துராமன் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.

    இப்பிரச்சினைத் தொடர்பாக ஆயிரம் ஜென்மங்கள் படக்கதையின் உரிமையாளரான நடிகை ‘செம்மீன்' ஷீலா செய்தி நிறுவனம் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-

    மலையாளப்படம்...

    30 வருடங்களுக்கு முன்பு நான் கதை எழுதி டைரக்டு செய்து நடித்து வெற்றி பெற்ற மலையாளப்படம் ‘யக்ஷகானம்'. அந்த படம் திரைக்கு வந்த காலகட்டத்தில் மூத்த பத்திரிகையாளரும், என் மூத்த சகோதரரைப் போன்றவருமான மதிஒளி சண்முகம் பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தார்.

    ஆயிரம் ஜென்மங்கள்...

    அவருக்கு உதவும் வகையில் ‘யக்ஷகானம்' படத்தை தமிழ் உள்பட மற்ற மொழிகளில் ‘ரீமேக்' செய்வதற்கான உரிமையை நான் அவருக்கு வழங்கினேன். அந்தக் கதைதான் துரை டைரக்ஷனில் ‘ஆயிரம் ஜென்மங்கள்' என்ற பெயரில் வெளிவந்தது.

    என் கதை தான்...

    ‘ஆயிரம் ஜென்மங்கள்' படத்தின் கதை என்னுடையது, உன்னுடையது என்று இப்போது சிலர் உரிமை கொண்டாடுகிறார்கள். அது, நான் எழுதிய கதை. வேறு யாருக்கும் உரிமை கிடையாது.

    எல்லா திகில் படங்களிலும்...

    ‘அரண்மனை' படத்தில், ‘ஆயிரம் ஜென்மங்கள்' படத்தின் சாயல் இருப்பதாக கூறுகிறார்கள். நான் அந்தப்படத்தை இன்னும் பார்க்கவில்லை. பொதுவாகவே திகில் படங்களில் ஒரு வீடு முக்கிய கதாபாத்திரமாக இருக்கும்.

    தவறில்லை...

    அதில் காதல் இருக்கும், ‘பிளாஸ்பேக்'கும் இருக்கும். பேய் படங்களில் ஒரு படத்தின் சாயல் இன்னொரு படத்தில் இருப்பது சகஜம்தான். அந்தவகையில் ‘அரண்மனை' படத்தில் ‘ஆயிரம் ஜென்மங்கள்' படத்தின் சாயல் இருப்பதில் தவறில்லை.

    உரிமை கொண்டாடவில்லை...

    என் கதை என்பதற்காக ‘அரண்மனை' படத்தை நான் நிறுத்தப்போவதில்லை. அதற்காக எந்த உரிமையும் கொண்டாடப்போவதில்லை. ஓடுகிற படத்தை நிறுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    The vetran actress Sheela has justified Aranmani story issue that all horror movies will have same resemblances.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X