Don't Miss!
- News
மறைந்தது குயில்..பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்
- Sports
இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!
- Lifestyle
உங்கள் தலைமுடியில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தேவசேனாவாக மாறிய ஷெரின்... என்ன போஸ் கொடுத்தாலும் நோ யூஸ்... பட வாய்ப்பு வரலையே!
சென்னை : நடிகை ஷெரின் தேவசேனா போன்ற கெட்டப்பில் கையில் வாளுடன் கெத்தாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ இணையத்தில் டிரெண்டடித்து வருகிறது.
நடிகை ஷெரின் தழுக் மொழுக் உடலைக்காட்டி எப்படியாவது பட வாய்ப்பை பெற்றுவிட வேண்டுமென சோஷியல் மீடியாவில் கவர்ச்சியில் துவம்சம் செய்து வருகிறார். ஆனால் பட வாய்ப்புதான் வந்தமாதிரி தெரியல.
விடா முயற்சி விஸ்பரூப வெற்றி என்பதை மனதில் வைத்துக்கொண்டு தினமும் விதவிதமான புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
எதற்கும்
துணிந்தவன்
படத்தில்
அரபிக்குத்தா...
வேற
லெவலில்
கொண்டாடும்
ரசிகர்கள்

முதல்படமே ஹிட்
நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் ஷெரின். முதல் படமே சூப்பர்ஹிட் ஆனது. அதேநேரம், அப்படம் சர்ச்சைக்கும் உள்ளானது. இந்த படத்திற்கு அடுத்து பெரிய பட வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் ஷெரினுக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.

படவாய்ப்பு வரவில்லை
விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்த ஷெரின் அதன்பின் திரையுலகில் இருந்து காணாமல் போய்விட்டார். திடீரென, ஆர்யா மற்றும் சந்தானம் நடித்த வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக காமெடி ரோலில் நடித்திருந்தார். நல்ல அழகும் திறமையும் இருந்தும் இவருக்கு பட வாய்ப்பு சரியாகவே அமையவில்லை.

ஆண்ட்டி போல
திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷெரின் வெயிட் போட்டு ஆண்ட்டி போல இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகாவது படவாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அந்த கனவும் பலிக்கவில்லை. தற்போது உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து மீண்டும் சிக்கென மாறி உள்ளார் ஷெரின்.

தேவசேனா செட்டப்
படவாய்ப்பு வந்தா வருது இருக்கவே இருக்கு போட்டோஷூட் என ரம்யா பாண்டியனின் பார்முலாவை கையில் எடுத்துக்கொண்டு தினமும் திணற திணற போட்டோஷூட் போட்டு அசத்தி வருகிறார். தற்போது இவர், பாகுபலி தேவசேனா போன்ற கெட்டப்பில் கையில் வாளுடன் கெத்தாக போஸ் கொடுத்துள்ளார். இந்த இணையத்தில் அந்த போட்டோ தாறுமாறாக ஹிட்டித்து பல லைக்குகளை பெற்று வருகிறது. ஆனால், ஒரு சில ரசிகர்கள், என்னத்தான் கெட்டப்பை மாற்றினாலும் நோ யூஸ் என்று நக்கலடித்து வருகின்றனர்.