twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேவசேனாவாக மாறிய ஷெரின்... என்ன போஸ் கொடுத்தாலும் நோ யூஸ்... பட வாய்ப்பு வரலையே!

    |

    சென்னை : நடிகை ஷெரின் தேவசேனா போன்ற கெட்டப்பில் கையில் வாளுடன் கெத்தாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ இணையத்தில் டிரெண்டடித்து வருகிறது.

    நடிகை ஷெரின் தழுக் மொழுக் உடலைக்காட்டி எப்படியாவது பட வாய்ப்பை பெற்றுவிட வேண்டுமென சோஷியல் மீடியாவில் கவர்ச்சியில் துவம்சம் செய்து வருகிறார். ஆனால் பட வாய்ப்புதான் வந்தமாதிரி தெரியல.

    விடா முயற்சி விஸ்பரூப வெற்றி என்பதை மனதில் வைத்துக்கொண்டு தினமும் விதவிதமான புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

    எதற்கும் துணிந்தவன் படத்தில் அரபிக்குத்தா... வேற லெவலில் கொண்டாடும் ரசிகர்கள் எதற்கும் துணிந்தவன் படத்தில் அரபிக்குத்தா... வேற லெவலில் கொண்டாடும் ரசிகர்கள்

    முதல்படமே ஹிட்

    முதல்படமே ஹிட்

    நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் ஷெரின். முதல் படமே சூப்பர்ஹிட் ஆனது. அதேநேரம், அப்படம் சர்ச்சைக்கும் உள்ளானது. இந்த படத்திற்கு அடுத்து பெரிய பட வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் ஷெரினுக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.

    படவாய்ப்பு வரவில்லை

    படவாய்ப்பு வரவில்லை

    விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்த ஷெரின் அதன்பின் திரையுலகில் இருந்து காணாமல் போய்விட்டார். திடீரென, ஆர்யா மற்றும் சந்தானம் நடித்த வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக காமெடி ரோலில் நடித்திருந்தார். நல்ல அழகும் திறமையும் இருந்தும் இவருக்கு பட வாய்ப்பு சரியாகவே அமையவில்லை.

    ஆண்ட்டி போல

    ஆண்ட்டி போல

    திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷெரின் வெயிட் போட்டு ஆண்ட்டி போல இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகாவது படவாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அந்த கனவும் பலிக்கவில்லை. தற்போது உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து மீண்டும் சிக்கென மாறி உள்ளார் ஷெரின்.

    தேவசேனா செட்டப்

    தேவசேனா செட்டப்

    படவாய்ப்பு வந்தா வருது இருக்கவே இருக்கு போட்டோஷூட் என ரம்யா பாண்டியனின் பார்முலாவை கையில் எடுத்துக்கொண்டு தினமும் திணற திணற போட்டோஷூட் போட்டு அசத்தி வருகிறார். தற்போது இவர், பாகுபலி தேவசேனா போன்ற கெட்டப்பில் கையில் வாளுடன் கெத்தாக போஸ் கொடுத்துள்ளார். இந்த இணையத்தில் அந்த போட்டோ தாறுமாறாக ஹிட்டித்து பல லைக்குகளை பெற்று வருகிறது. ஆனால், ஒரு சில ரசிகர்கள், என்னத்தான் கெட்டப்பை மாற்றினாலும் நோ யூஸ் என்று நக்கலடித்து வருகின்றனர்.

    English summary
    Actress sherin blue saree photos trending in social media, நடிகை ஷெரினின் புதிய புகைப்படம்
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X