இது என்னடா டோரா புஜ்ஜிக்கு அக்கா மாதிரி இருக்கு.. பிக்பாஸ் நடிகையை வச்சு செய்த நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை ஷெரினின் புதிய அவதாரத்தை பார்த்த நெட்டிசன்கள் டோரா புஜ்ஜிக்கு அக்கா போன்று இருப்பதாக பங்கம் செய்துள்ளனர்.

Recommended Video

Sherin Samayal spicy Pepper Chicken | Bigg Boss • Celebrity Cooking ° Vijay TV

நடிகை ஷெரின் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தார்.

ஆனால் எதிர்பார்த்தப்படி அவர் தமிழ் சினிமாவில் சோபிக்கவில்லை. பின்னர் ஒரு பாடலுக்கு ஆடும் நடிகையானார்.

அடையாளம் தெரியாமல்

அடையாளம் தெரியாமல்

இந்நிலையில் தான் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும்போது எடை கூடி ஷெரினா இது? இப்படி ஆகிவிட்டாரே என்று கேட்கும் அளவுக்கு இருந்தார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வரும் போது ஆளே அடையாளம் தெரியாதப்படி மாறியிருந்தார்.

ஒரு தலை காதல்

ஒரு தலை காதல்

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சக போட்டியாளரான தர்ஷன் மீது காதல் கொண்டார் ஷெரின். ஏற்கனவே தர்ஷனுக்கு காதலி இருக்கிறார் என்பது தெரிந்தும் அவரை காதலித்தார். இதனால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

ஷெரின் தான் காரணம்

ஷெரின் தான் காரணம்

அதற்கு ஏற்றார் போலவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தர்ஷனின் காதல் பிரேக்கப் ஆனது. தர்ஷனின் காதல் முறிவுக்கு ஷெரின் தான் காரணம் என கூறப்பபட்டது, ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சமூக வலைதளங்களில் போட்டோக்களை எடுத்து தள்ளி வருகிறார்.

வச்சு செய்துள்ளனர்

வச்சு செய்துள்ளனர்

விதவிதமான உடையில் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். ஷெரின் அண்மையில் வெளியிட்ட தாவணி மற்றும் சேலை வீடியோக்கள் வேற லெவலில் வைரலானது. இந்நிலையில் நடிகை ஷெரின் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை வச்சு செய்துள்ளனர்.

கண்ணாடி போன்ற கவுன்

கண்ணாடி போன்ற கவுன்

அதாவது கறுப்பு நிற பேண்ட் மற்றும லுப் வைத்த ஸ்லிப் போன்ற டாப்ஸை அணிந்துள்ளார் ஷெரின். அதன் மேலாக கண்ணாடி போன்ற கவுன் டிஸைனிலான ஓவர் கோட்டை அணிந்துள்ளார்.

புதிய ஹேர் ஸ்டைல்

புதிய ஹேர் ஸ்டைல்

இதில் அவர் உள்ளே அணிந்திருக்கும் அத்தனையும் அப்படியே தெரிகிறது. இந்த போட்டோவின் ஸ்பெஷாலிட்டியே அவரது ஹேர் ஸ்டைல் தான். ஷெரின் இதில் ஹிப்பி போன்ற ஹேர் ஸ்டைலை வைத்துள்ளார்.

டோரா புஜ்ஜிக்கு அக்கா

டோரா புஜ்ஜிக்கு அக்கா

அதனை பார்த்த நெட்டிசன்கள், இது என்ன டோரா புஜ்ஜிக்கு அக்கா மாதிரி இருக்கு என கிண்டலடித்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் இந்த ஷுட்டுக்கா சில்வர் பேப்பர வேஸ்ட் பண்ண என கேட்டுள்ளனர்.

பாபி டால் போல்

பாபி டால் போல்

இன்னும் சில நெட்டிசன்கள், இந்த ஹேர் கட் நல்லாவே இல்லை என்றும், இது த்ரோபேக் போட்டோவா அல்லது புதிய போட்டோ ஷுட்டா என கேட்டுள்ளனர். அதே நேரத்தில் சில நெட்டிசன்கள் நீங்கள் பாபி டால் போன்று இருக்கிறீர்கள் என கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X