அந்தரத்தில் ஆட்டம் போடும் ஷெரின்.. மிரளும் ஃபேன்ஸ்.. ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்டு அதகளம்!
சென்னை: நடிகை ஷெரின் அந்தரத்தில் தொங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷெரின். தொடர்ந்து ஸ்டூடன்ட் நம்பர் 1, விசில் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் படங்களில் ஒரு பாடலுக்கு ஆடும் அளவுக்கு இறங்கினார் ஷெரின்.

பிக்பாஸ் சீசன் 3
இந்நிலையில் எடை கூடிய ஆன்ட்டி லுக்கில் இருந்த ஷெரின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால் நிகழ்ச்சி நிறைவடையும் போது எடை முற்றிலும் குறைந்து பழைய ஷெரினாக பிரமிக்கும் ட்ரான்ஸ்ஃபர்மேஷனுடன் வெளியேறினார்.

போட்டோ ஷூட்
இதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார் ஷெரின். இதற்காக விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஷெரின் தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

அந்தரத்தில் ஆட்டம்
அந்த வகையில் தற்போது ஷெரின் ஷேர் செய்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகை ஷெரின் ரோப்புகளை கட்டிக்கொண்டு அந்தரத்தில் தொங்குகிறார். அப்படியே கைகளை வளைத்து நடனமும் ஆடுகிறார்.
Recommended Video

மாஸ்டர் படத்தின் பாடல்
ஷூட்டிங் ஸ்பாட்டில் க்ரீன்மேட்டில் எடுத்த இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ஷெரின். இந்த வீடியோவுக்கு பின்னணி பாடலாக மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒலிக்கிறது.

பதறும் நெட்டிசன்ஸ்
ஷெரினின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், பார்த்து ஜாக்கிரதை என பதறியுள்ளனர். மேலும் சிலர் பேய் படத்திற்கான ஷூட்டிங்கா என்று கேட்டும் கிண்டலடித்துள்ளனர். இதேபோல் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ஷெரின்.


Click it and Unblock the Notifications











