செம க்யூட்.. சுத்திப்போடுங்க.. கண்ணுப்பட போகுது.. பிக்பாஸ் நடிகையின் அட்டகாச டிக்டாக் வீடியோ!

சென்னை: நடிகை ஷெரின் வெளியிட்டுள்ள டிக்டாக் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் செம க்யூட் என
புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர்.

Recommended Video

செம்ம க்யூட்.. வைரலாகும் நடிகை ஷெரினின் அட்டகாசமான டிக்டாக் வீடியோ!

நடிகை ஷெரின், துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து ஜெயா, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஷெரினுக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பீமா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

அதன் பிறகு சில படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்களும் பெரிதாக எந்த திருப்பத்தையும் ஏற்படுத்தவில்லை. இதே கதிதான் அவரது கன்னட மார்க்கெட்டிலும். இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

அதில் சக போட்டியாளரான தர்ஷன் உடன் நெருக்கமாக பழகினார் ஷெரின். தர்ஷனுக்கு ஏற்கனவே காதலி இருக்கிறார் என்று தெரிந்தும் அவரை ஒரு தலையாக காதலித்தார். இதனால் சர்ச்சைக்கு ஆளானார். மேலும் மதுமிதா தற்கொலைக்கு முயற்சிக்கு அவரும் ஒரு காரணம் அவர்தான் என தெரிய வந்ததும் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர்.

டிக்டாக் வீடியோக்கள்

டிக்டாக் வீடியோக்கள்

தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி காதல் முறிந்தது. அதற்கு காரணம் ஷெரினுடன் தர்ஷனுக்கு ஏற்பட்ட நெருக்கம்தான் என்று கூறப்பட்டது. ஆனால் அதையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாத ஷெரின் தன்பாட்டுக்கு டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அன்பே நீ என் இட்லி..

அன்பே நீ என் இட்லி..

அந்த வகையில் தற்போது ஷெரின் வெளியிட்டுள்ள டிக்டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அன்பே நீ என் இட்லி.. நான் தான் உன் சட்னி.. என தொடங்கும் காமெடி கவிதையை நவரசத்துடன் சொல்லி அசத்தியிருக்கிறார் ஷெரின்.

தூக்கிட்டு போயிடுவாரு

தூக்கிட்டு போயிடுவாரு

அவரது க்யூட் ரியாக்ஷன்களை பார்த்த நெட்டிசன்கள் வாவ்.. என வாயை பிளந்திருக்கின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள், நீங்கள் சரி என்று கூறுவதற்கு முன்பே அவர் உங்களை தூக்கி சென்று கல்யாணம் செய்து கொள்வார் என அவரது க்யூட்னஸை புகழ்ந்துள்ளனர்.

சுத்தி போடுங்க..

சுத்தி போடுங்க..

இன்னும் சில நெட்டிசன்கள், உங்களை விரைவில் பெரிய திரையில் பார்க்க ஆசைப்படுகிறோம் இயற்கையாகவே உங்களுக்குள் நடிப்புத் திறமை இருக்கிறது என கூறியுள்ளனர். இன்னும் சிலர், அம்மாக்கிட்ட சொல்லி சுத்தி போடுங்க கண்ணு வச்சுட்டோம் என்றும் கூறி தங்களின் அன்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X