Don't Miss!
- News
"பாஜகவில் சேர்ந்தா தப்பிச்சீங்க.. இல்லனா புல்டோசர்தான்" - காங்கிரசை ஓப்பனாக மிரட்டிய பாஜக அமைச்சர்
- Finance
அம்பானி குடும்பத்தின் மருமகள்கள், மருமகன்.. யாரு பெஸ்ட்..?!
- Lifestyle
குளிர்காலத்துல இந்த ஆரோக்கியமான பானங்களை குடிப்பது... உங்க உடலுக்கு பல அதிசயங்கள செய்யுமாம்!
- Sports
"யார்பா அது முரட்டு ஆளா ஓடுற" ரோகித்தை முட்டி தள்ளிய பாதுகாவலர்.. 2வது ODIல் சுவாரஸ்ய நிகழ்வு!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Technology
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
3 குரங்குகள் போஸ்...நண்பர்களுடன் செம லூட்டி அடிக்கும் பிக் பாஸ் ஷெரீன்!
சென்னை : நடிகை ஷெரீன் விதவிதமான போட்டோவை அப்லோடு செய்து இணையத்தை திணறடித்து வருகிறார். தற்போது இவர் ஷேர் செய்துள்ள போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
துள்ளுவதோ இளமை படத்தின் பள்ளி மாணவியாக தனது அறிமுகத்தை கொடுத்தவர் ஷெரீன். அந்த படத்தில் பள்ளி மாணவி கதாபாத்திரம் இவருக்கு நன்றாக பொருந்தி இருந்தது.
ஷெரீன் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே போலீஸ் டாக், துருவா ஆகிய கன்னட படங்களில் நடித்திருந்தார்.
ஒய்யார நடைபோடும் அழகிய அசுரா ஷெரீன்...வைரலாகும் வீடியோ!

நடிகை ஷெரீன்
துள்ளுவதோ இளமை படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ஸ்டூடன்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி ஆகிய படங்களிலும் நடித்தார். ஆனால், எந்தப்படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தரவில்லை. ஆனால், விசில் படத்தில் வில்லியாக நடித்த இவரின் நடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ரங்கு ரங்கம்மாவாக மாறிய ஷெரீன்
அதன்பிறகு தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்திருந்தார் ஷெரின். அழகும், திறமையும் இருந்த போதும் தமிழில் பட வாய்ப்பு இல்லாததால், விக்ரமின் பீமா படத்தில் ரங்கு ரங்கம்மா பாடலுக்கு குலுக்கி மினுக்கி கவர்ச்சி குத்தாட்டம் போட்டு கவர்ச்சிக்கும் பச்கைக் கொடி காட்டினார். ஆனால், உடல் எடை அதிகரித்ததால், அந்த கனவும் நிறைவேறாமல் போனது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்
இதையடுத்து, பட வாய்ப்பு இல்லாமல் இருந்த ஷெரீனுக்கு விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொள்ளும் ஒரு அருமையான வாய்ப்பை கொடுத்தது. அந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் குண்டாக இருந்த ஷெரீன், நிகழ்ச்சியின் முடிவில் எடை குறைந்து அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு சும்மா சிக்குனு மாறிவிட்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஷெரீனுக்கு கணிசமான மக்களின் ஆதரவு கிடைத்தது. இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சி பின் படவாய்ப்பு வருமா என்று எதிர்பார்த்தார் ஆனால் அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது.

இணையத்தில் படு ஆக்டிவ்
இருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வந்த ரசிகர்களை தக்கவைத்துக் கொள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். சமீபத்தில் கண்ணாடி முன் நின்று, மெல்லிய உடையை லாவகமாக தனது அழகு தெரியும்படி ஒரு போட்டோவை பகிர்ந்து இருந்தார்.அந்த புகைப்படம் 18 ஆயிரம் லைக்குகளை பெற்றது.

செம ஹாட் மச்சி
தற்போது ஷெரீன் தனது நண்பர்களுடன் 3 குரங்குகள் போல, கண்ணை மூடி...வாயை மூடி, காதை மூடி போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவில் ஷெரீன் குட்டி பாவாடை அணிந்து இருக்கிறார். இந்த போட்டோவிற்கும் லைக் குவிந்து வரும் நேரத்தில், ஷெரீனின் தீவிர ரசிகர் ஒருவர் Sherin Mam U look So hot & Beautiful என பதிவிட்டு இதயத்தை பரிசாக அளித்துள்ளார்.