Actress Sherin: பாலில் ஊறவைத்த குலாப் ஜாமுன்.. ஷெரின் அழகை வர்ணிக்கும் பேன்ஸ்!
சென்னை: பாலில் ஊறவைத்த குலாப் ஜாமுன் போல அழகாக கொழுக்கு மொழுக்குனு இருக்கும் நடிகை ஷெரின் பெங்களுரில் பிறந்து வளர்ந்தார். கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த இவர், தற்போது சோஷியல் மீடியாவில் மட்டும் ஆக்டிவாக உள்ளார். இன்ஸ்டாகிராமில் மகளிர் தின ஸ்பெஷராக இவர் ஷேர் செய்துள்ள போட்டோவிற்கு லைக்குள் குவிந்து வருகின்றன.
நடிகை ஷெரின் இயக்குநர் செல்வராகவனின் துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படத்திலேயே நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இவர் தொடர்ந்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் ஆகிய படங்களில் நடித்து தன்னுடைய ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கினார். விசில் படத்தில் அழகிய அசுரா என்று இவர் போட்ட ஆட்டத்தை ரசிகர்களால் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது.

நடிகை ஷெரின்: தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில படங்களிலேயே இவர் காணாமல் போனார். படவாய்ப்பு குறைந்ததை அடுத்து, பீமா படத்தில் ரங்கு ரங்கம்மா என்ற ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடி இருந்தார். அதன்பிறகும் படவாய்ப்பு வராததால், நண்பேண்டா படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக காமெடி காட்சியில் நடித்திருந்தார்.

பிக்பாஸ் சீசன் 3: நீண்ட காலங்கள் கழித்து பிக்பாஸ் சீசன் 3ல் பங்கேற்ற ஷெரின் தன்னுடைய ரசிகர்கள் வட்டத்தை மீண்டும் தன்வசப்படுத்தினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் போது மிகவும் குண்டாக காணப்பட்ட ஷெரின், அந்த வீட்டில் இருந்த சில மாதங்களிலேயே கடுமையான டையட்டுகளை பாலோ செய்து, உடல் எடையை குறைத்தார். அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மீண்டும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விதவிதமாக சமைத்து அசத்தினார்.

மகளிர் தின ஸ்பெஷல் போட்டோ: இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் ஷெரின்,தொடர்ந்து தனது ரசிகர்களின் கண்களை கவரும் வகையில் அழகான படங்களை வெளியிட்டு பாலோவர்களை அதிகரித்து வருகிறார். அந்த வகையில் நேற்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தாய்லாந்தில் எடுத்த அழகான போட்டோவை ஷேர் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், என் அன்பான பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள், ஒரு பெண்ணாக இருப்பது ஒரு பயணம் அந்த பயணத்திற்காக நான் இங்கே இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
காதல் தோல்வி: அண்மையில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த ஷெரின், நான் எனது நீண்ட நாள் காதலரை பிரிந்து மன அழுத்தத்தில் இருந்தேன், தினமும் அழுதுக்கொண்டும் புலம்பிக்கொண்டும் இருந்தேன். இந்த மன அழுத்தத்தில் இருந்த எப்படியாவது வெளியில் வரவேண்டும் என்று நினைத்தேன் அப்போதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்றால் மனதில் ஒரு வெறி இருக்க வேண்டும் அந்த வெறி காதல் தோல்வியால் எனக்கு இருந்தது. இதனால், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்றார்.


Click it and Unblock the Notifications











