Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
எங்க இருந்து வந்துச்சுன்னே தெரியல இந்த கொரோனா.. பாதிக்கப்பட்ட ஷெரின்.. கவலையில் கலங்கும் ரசிகர்கள்!
சென்னை: பிக்பாஸ் பிரபலமான நடிகை ஷெரின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கன்னட நடிகையான ஷெரின் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்தப் படத்தில் பள்ளி மாணவியாக தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷெரின்.
தொடர்ந்து ஜெயா, ஸ்டுடன்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வரலக்ஷ்மி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார் ஷெரின்.
விஜய் சேதுபதியின் மௌனப் படத்தில் இணைந்த பிரபல தமிழ் நடிகை!

ஒரு பாடலுக்கு ஆடிய ஷெரின்..
திறமையான நடிகையாக இருந்த போதும் ஷெனுரினுக்கு தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்.

கடைசியாக நண்பேன்டா படத்தில்
தமிழ், கன்னடம் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார் ஷெரின். கடைசியாக 2015ஆம் ஆண்டு வெளியான நண்பேன்டா படத்தில் நடித்திருந்தார் ஷெரின்.

பிக்பாஸில் 5 ஃபைனலிஸ்ட்டுகளில் ஒருவர்
அதன்பிறகு பட வாய்ப்புகள் எதுவும் கிட்டாததால் கடந்த 2019ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று டாப் 5 ஃபைனலிஸ்ட்டுகளில் ஒருவராய் இருந்தவர் ஷெரின்.இதில் இறுதி வரை சென்ற ஷெரின் மூன்றாவது ரன்னர் அப் ஆனார்.

பிக்பாஸுக்கு பிறகும் வாய்ப்பு இல்லை
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகாவது பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தார் ஷெரின். இதற்காக விதவிதமாக போட்டோ ஷூட்டுக்களையும் நடத்தி வந்தார். ஆனால் எந்தப் படத்திலும் கமிட்டானதாக தெரியவில்லை.

தன்னையே நம்ப முடியாத ஷெரின்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இருந்த ஷெரினுக்கும் நிகழ்ச்சி முடியும் போது இருந்த ஷெரினுக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. பெருமளவு எடை குறைந்து ஸ்லீம்மாக சிக்கென இருந்தார் ஷெரின். தன்னுடைய ட்ரான்ஸ்ஃபர்மேஷனை தன்னாலேயே நம்ப முடியாமல் இருந்தது ஷெரினுக்கு.

தர்ஷன் மீது ஒரு தலை காதல்
அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சக போட்டியாளரான தர்ஷன் மீதும் காதல் கொண்டார் ஷெரின். தர்ஷனுக்கு வெளியில் காதலி இருக்கிறார் என்பதை தெரிந்தும் தர்ஷனை ஒரு தலையாக காதலித்தார். தர்ஷனுக்கும் ஷெரின் மீது க்ரஷ் இருந்தது.

சனம் ஷெட்டியை பிரிந்த தர்ஷன்
இருப்பினும் தனக்கு வெளியே காதலி இருப்பதாக கூறி அவரிடமிருந்து விலகிய தர்ஷன் நட்பை தொடர்ந்து வந்தார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தர்ஷன் தனது காதலியான சனம் ஷெட்டியை விட்டு விலகினார். அவருடனான காதலை முறித்துக் கொண்டார்.
Recommended Video

காதல் முறிவுக்கு ஷெரின் தான் காரணம்
தர்ஷன் - சனம் ஷெட்டி காதல் முறிவுக்கு ஷெரின் தான் காரணம் என கூறப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஷெரின் தொடர்ந்து பல போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

ஷெரினுக்கு கொரோனா தொற்று உறுதி
சமீபத்தில் பீச்சில் அரைகுறை உடையில் ஒய்யார நடை போட்டு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. இந்நிலையில் நடிகை ஷெரின் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எங்கிருந்து வந்துச்சுன்னே தெரியல
இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, எங்கிருந்து வந்துச்சுன்னே தெரியல.. எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடைசி 3 அல்லது 4 நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்திருந்தால் உங்களை தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள் விரைவில் டெஸ்ட்டும் செய்து கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.

பதட்டப்படாமல் இருப்பதுதான் முக்கியம்
ஷெரினின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், எங்களை அழ வைக்காதீர்கள்.. எங்களுக்கு ரொம்ப கவலையாக உள்ளது என பதிவிட்டுள்ளனர். மேலும் சிலர் பதட்டப்படாதீர்கள் இன்னும் 14 நாட்களில் எல்லாம் சரியாகிவிடும்.. இந்த மாதிரி நேரத்தில் பதட்டப்படாமல் இருப்பதுதான் முக்கியம் என ஆறுதல் கூறி வருகின்றனர்.

விரைவில் குணமடையுங்கள் ஓய்வெடுங்கள்
மேலும் கவலைப்படாதீர்கள் விரைவில் குணமடையுங்கள் என்றும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். சில நெட்டிசன்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்.. நன்றாக ஓய்வெடுங்கள் என அக்கறையுடன் பதிவிட்டு வருகின்றனர்.