வாட்ஸ் யுவர் ஸ்ட்ரென்த்.. சோறு சார்.. ஒரு கட்டுக் கட்டும் ஷெரினின் அசத்தல் டிக்டாக் வீடியோ!
சென்னை: நடிகை ஷெரின் சாப்பிட்டப்படி வெளியிட்டுள்ள டிக்டாக் வீடியோவை நெட்டிசன்கள் ரசித்து மகிழ்ந்து வருகின்றனர்.
Recommended Video
நடிகை ஷெரின் செல்வராகவன் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
தமிழில் ஜெயா, ஸ்டூடன்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தர்ஷனுடன் நெருக்கம்
பட வாய்ப்புகள் இல்லாததால் விக்ரமின் பீமா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் நடிகை ஷெரின். இதில் பங்கேற்ற சக போட்டியாளரான தர்ஷனுடன் நெருங்கி பழகினார் ஷெரின்.

காதலி சனம் ஷெட்டி
மேலும் தர்ஷன் மீது ஒருதலையாக காதல் கொண்டார். தர்ஷனுக்கு ஏற்கனவே காதலி இருக்கின்றார் என்று தெரிந்தும் அவருக்கு ஷெரின் காதல் கடிதம் எழுதியது பெரும் விமர்சனத்துக்குள்ளானது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு தர்ஷன் தன்னுடைய காதலியான சனம் ஷெட்டியை பிரிந்தார்.

ஷெரின்தான் காரணம்
இதனால் தர்ஷன் சனம் ஷெட்டி காதல் முறிவுக்கு அவர் ஷெரின்தான் காரணம் என்ற பேச்சும் எழுந்தது. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத ஷெரின் தொடர்ந்து போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வந்தார். அந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
ஷெரின் டிக்டாக்
அந்த வகையில் இன்று ஒரு டிக்டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார் ஷெரின். அதில் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடுகிறார். வாட்ஸ் யுவர் ஸ்ட்ரென்த் என்று கேட்கும் ஆண் குரலுக்கு சோறுதான் சார் என்கிறார். மேலும் வாட்ஸ் யுவர் வீக்னஸ் என்று எழும் குரலுக்கும் சோறுதான் என்கிறார்.

சிக்கென ஆகிவிட்டார்
மேலும் யாரெல்லாம் ஒத்து கொள்கிறீர்கள் என்றும் நடிகை ஷெரின் கேட்டுள்ளார். ஷெரினின் இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்படுவதோடு லைக்ஸ்களையும் அள்ளி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய போது பல்க்காக இருந்த ஷெரின் நிகழ்ச்சி நிறைவடையும் போது சிக்கென ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











