நானா அந்த மர்ம பெண்? அமைதியா இருக்கேன்னு பொய்ய பரப்பாதீங்க.. டிவிட்டர் பயனாளியை வெளுத்த பிரபல நடிகை!
மும்பை: சுஷாந்த் மரணமடைந்த நாளில் அவரது வீட்டிற்கு வெளியே இருந்த மர்ம பெண் தான்தான் என்று கூறிய டிவிட்டர் பயனாளியை பிரபல நடிகை வெளுத்து வாங்கியுள்ளார்.
Recommended Video
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி தனது மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கியப்படி சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரண வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
சுஷாந்த் தொடர்பான ஏதாவது ஒரு தகவல் நாள் தோறும் வெளியாகி கடந்த இரண்டு மாதங்களாக புயலை கிளப்பி வருகிறது. அதிலும் குறிப்பாக அவரது பிரேத பரிசோதனை அறிக்கை பெரும் பிரளயத்தை கிளப்பி வருகிறது.

பல்வேறு கோணங்கள்
அதனை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவ குழுவின் உதவியை நாடியிருக்கிறது சிபிஐ. சுஷாந்த் உடல் கண்டடெடுக்கப்பட்ட போது அவரது வீட்டில் இருந்தவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம் பெண் ஒருவர்
இந்நிலையில் சுஷாந்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக அவரது வீட்டிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டபோது இளம் பெண் ஒருவர் அவரது உடலுக்கு அருகில் இருப்பது போன்றும் காரில் ஏறுவது போன்ற போட்டோக்களும் வெளியானது.

தடயங்களை சேகரிக்க
அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்களும் சுஷாந்தின் ரசிகர்களும் அந்த மர்மப் பெண் யார்? ஏதாவது தடயத்தை எடுக்க வந்தாரா என கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் அவர் ஒரு பிஆர்ஓ மற்றும் ரியா சக்ரவர்த்தியின் சகோதரரான ஷோவிக் சக்ரவர்த்தியின் கேர்ள் ஃபிரண்ட் என்றும் தகவல் வெளியானது.

கடுப்பான நடிகை
இந்நிலையில் டிவிட்டர் பயனாளி ஒருவர், சுஷாந்த் மரணமடைந்த நாளில் அவர் வீட்டில் இருந்த அந்த மர்ம பெண், நடிகை ஷிபானி தண்டேகர்தான் என்று குறிப்பிட்டிந்தார். இதனை பார்த்த கடுப்பான நடிகை ஷிபானி தண்டேகர் அந்த டிவிட்டர் பயனாளியை விளாசி தள்ளியுள்ளார்.

பொய்யான செய்திகளை பரப்பாதீர்கள்
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், அது நானும் அல்ல, சிமோனும் அல்ல! தயவுசெய்து நீங்கள் ஊகித்து கூறும் முன் சரிபார்க்கவும் .. இது அவரது பி.ஆர் நபர் ராதிகா நிஹலானி மற்றும் அவரது உதவியாளர். போலி செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்! போதும்! என்னுடைய அமைதி தொடர்ந்து பொய்களையும் வெறுப்பையும் பரப்ப உங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

சிமோனும் சீறல்
இதனிடையே ஷிபானி தண்டேகர் குறித்து பதிவிட்ட அந்த நபர் தனது டிவிட்டை டெலிட் செய்துள்ளார். இதேபோல் டிசைனர் சிமோனும், அந்த மர்ம பெண் தான்தான் என்று கூறியவர்களுக்கு அது நான் இல்லை போலியான செய்தியை பரப்பாதீர்கள் என காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











