Shilpa Manjunath: ப்பா.. என்ன கண்ணுடா.. சொர்க்கமே தெரியுதே.. ஷில்பா மஞ்சுநாத் ஹாட் பிக்ஸ்!
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் பிரபலமானவர் தான் இந்த ஷில்பா மஞ்சுநாத். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் வரும் 'கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்... ஒரு பார்வை பாராடி பெண்ணே என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ஷில்பா மஞ்சுநாத், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி தூக்கலாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
கர்நாடகாவில் பிறந்த ஷில்பா மஞ்சுநாத், மலையாள சினிமாவில் ரோசாப்பூ என்ற படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். இதைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தில் நடித்து தமிழில் சினிமாவில் அறிமுகமானார். வித்தியாசமான கதை அம்சத்தை கொண்ட இந்த படத்தில் ஷில்பா, பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின் தெரிந்த முகமாகமாறினார் ஷில்பா.

நடிகை ஷில்பா மஞ்சுநாத்: இதையடுத்து, ஹரீஷ் கல்யாணுடன் காதல் மற்றும் ரொமான்டிக் திரைப்படமான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் இளசுகளின் இதயத்தை கொள்ளை கொண்டார். இந்த படத்திற்கு பின் படவாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படங்கள் எதுவும் அமையாததால், உடல் எடையை கணிசமாக குறைத்து கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார்.

என்ன கண்ணுடா: மற்ற நடிகைகளை போல இன்ஸ்டாகிராமில் கவர்ச்சிகரமான புகைபடங்களால் இளைஞர்களை திக்கு முக்கு ஆட வைக்கும் இவர், தற்போது தனது எடுப்பான முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வரும் நிலையில், ஷில்பாவின் கவர்ந்து இழுக்கும் கண்ணைப்பார்த்த ரசிகர்கள், ப்பா.. என்ன கண்ணுடா.. சொர்க்கமே தெரியுதே ஷில்பா மஞ்சுநாத்தை கொண்டாடி வருகின்றனர்.

சிங்கப்பெண்ணே: நடிகை ஷில்பா, தமிழ் பெண்ணின் சாதனை பற்றி பேசும் படமான சிங்கப்பெண்ணே படத்தில், நீச்சல் விளையாட்டில் பல்வேறு சாதனைகள் புரிந்து வரும் நீச்சல் வீராங்கனையான ஆர்த்தி என்ற பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சதீஷ் இயக்கி தயாரித்துள்ள இப்படத்திற்கு, ட்ரம்ஸ் சிவமணியின் மகன் குமரன் சிவமணி இசையமைத்துள்ளார். கபிலன் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இத்திரைப்படம் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.



Click it and Unblock the Notifications











