மதுரை மீனாட்சி போல அச்சு அசலாக இருக்கும் நடிகை ஷில்பா மஞ்சுநாத்!

சென்னை: இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்

தமிழ், மலையாளம், கன்னடம் என தென்னிந்தியாவில் பல மொழிகளில் இவர் நடித்து வருகிறார்

இப்பொழுது இயக்குனர் நட்ராஜன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வரும் ஷில்பா மஞ்சுநாத் அச்சு அசல் மதுரை மீனாட்சி போல அசத்தலான லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பிளாஷ்பேக் காட்சிகளில்

பிளாஷ்பேக் காட்சிகளில்

நடிகர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா தமிழ் சினிமாவில் இயக்குனராக படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் இயக்குனர் கிருத்திகா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இந்த படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் ஷில்பா மஞ்சுநாத் வந்து செல்வார்.

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

இந்த நிலையில் இரண்டாவது படமாக ஷில்பாவுக்கு வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் இப்பொழுது பிரபலமாக இருப்பதற்கு இப்படம் மிகப்பெரிய காரணமாக உள்ளது. இளம் நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் முழுக்க முழுக்க திகட்டாத காதல் திரைப்படமாக வெளியானது.

திகட்டாத காதல்

திகட்டாத காதல்

இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா லவ் கெமிஸ்ட்ரி மிக நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருந்தது. அழுத்தமான காதல் காட்சிகள், திகட்டாத காதல் என வெளியான இந்த திரைப்படம் ஷில்பா மஞ்சுநாத் - க்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது மற்றும் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக்கியது.

நேரடியாக ஓடிடி தளத்தில்

நேரடியாக ஓடிடி தளத்தில்

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஷில்பா மஞ்சுநாத் படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் தேவதாஸ் பிரதர்ஸ் என்ற படம் வெளியானது ஆனால் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. முழுக்க முழுக்க இளம் காதலர்கள் பற்றி வெளியான இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

அச்சு அசல் மதுரை மீனாட்சி

அச்சு அசல் மதுரை மீனாட்சி

இப்பொழுது இயக்குனர் நட்ராஜன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடிக்கடி சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வரும் இவர் இப்போது அச்சு அசல் மதுரை மீனாட்சி போல இருக்கும் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பதிவிட அவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X