Shilpa Manjunath: ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட இதயராணி.. கலக்கல் போஸில் ஷில்பா மஞ்சுநாத்!
சென்னை: நடிகை ஷில்பா மஞ்சுநாத் முன்கரு என்ற கன்னட மொழி படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். இந்த படம் இவருக்கு சிறப்பான அறிமுகத்தை மற்றும் வரவேற்பை பெற்றுக் கொடுத்த நிலையில் தமிழில் விஜய் ஆண்டனியுடன் எமன் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். தொடர்ந்து அவருடன் மீண்டும் காளி படத்தில் நடித்திருந்தார் ஷில்பா.
இந்த படங்களை தொடர்ந்து தமிழில் ஹரீஷ் கல்யாண் லீட் கேரக்டரில் நடித்து வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்திலும் ஷில்பா நடித்திருந்தார். இந்த படம் இளைஞர்களின் கனவு கன்னியாக அவரை உயர்த்தியது. தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அடுத்தடுத்த மொழி படங்களில் நடித்து தன்னை பிசியாக வைத்துள்ளார் ஷில்பா.

நடிகை ஷில்பா மஞ்சுநாத்: தமிழ் தெலுங்கு உள்ளிட்ட அடுத்தடுத்த மொழி படங்களில் நடித்து வருகிறார் ஷில்பா மஞ்சுநாத். மிஸ் கர்நாடகா என்ற டைட்டிலை வெற்றி கொண்டுள்ள இவர் முன்கரு என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்ற நிலையில் கடந்த 2017ம் ஆண்டில் எமன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்திருந்தார். விஜய் ஆண்டனியின் இந்தப் படமும் சிறப்பாக அமைந்த நிலையில் ஷில்பா மஞ்சுநாத்திற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.
ரசிகர்களின் இதயராணி: கிளாமராக இருந்தாலும் குடும்ப பாங்கான கேரக்டராக இருந்தாலும் தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை அடுத்தடுத்த படங்கள் மூலம் நிரூபித்துள்ளார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் மட்டுமில்லாமல் கன்னடம். மலையாளம் மொழி படங்களிலும் இவரை பார்க்க முடிந்தது. தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக மாறி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் ஷில்பா மஞ்சுநாத். தமிழில் விஜய் ஆண்டனியுடன் எமன் படத்தை தொடர்ந்து அவருடன் காளி படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின்பு ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேர்ந்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்திலும் நடித்திருந்தார்.

ஸ்டைலிஷ் லுக்கில் ஷில்பா: இந்த படம் மூலம் இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார். தொடர்ந்து ரோசாப்பூ என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகிலும் என்ட்ரி கொடுத்தார். கடந்த ஆண்டில் சிங்க பெண்ணே என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக காணப்படும் ஷில்பா, தன்னுடைய போட்டோசூட் புகைப்படங்களை அடுத்தடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அடுத்தடுத்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ஏராளமான லைக்ஸ்களை அள்ளி வருகிறார். இந்நிலையில் தற்போது மிகவும் ஸ்டைலிஷ் லுக்கில் ஷில்பா மஞ்சுநாத் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

விருப்பமான கேரக்டர்கள்: தனக்கு விளையாட்டு படங்களில் அதிகமாக நடிக்க விருப்பம் உள்ளதாக பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மேலும் லவ் ஸ்டோரியில் நடிக்கவும் தனக்கு அதிகமாக பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் இவரது கேரியர் பெஸ்ட்டாக அமைந்த நிலையில் இந்தப் படத்தை ரசிகர்கள் தற்போதும் கொண்டாடுவதாக ஷில்பா மேலும் கூறியிருந்தார். இந்தப் படம் ஹரீஷ் கல்யாணுடன் சிறப்பான நட்பை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தன்னுடைய திறமையை சினிமா மேலும் அதிகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











