பணிப்பெண்ணுக்கு முத்தம்.. கணவருக்கு தர்ம அடி கொடுத்து புரட்டிய பிரபல நடிகை.. தீயாய் பரவும் வீடியோ!

சென்னை: பணிப்பெண்ணுக்கு முத்தம் கொடுத்த கணவரை பிரபல நடிகை புரட்டி எடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

பணிப்பெண்ணுக்கு முத்தம்.. கணவருக்கு தர்ம அடி கொடுத்து புரட்டிய பிரபல நடிகை.. தீயாய் பரவும் வீடியோ!

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுக்க லாக்டவுன் அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள், தொழில் அதிபர்கள், அரசியல் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் என பலரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

லாக்டவுன் நேரத்தில் பிஸியாக தங்களை வைத்திருக்கும் வகையில் அவரவர் இஷ்டப்பட்ட வேலைகளை செய்து வருகின்றனர். திரை பிரபலங்கள் அவர்களின் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.

யோகா வீடியோ

யோகா வீடியோ

தங்களின் குடும்பத்துடன் செலவழிப்பது, வித்தியாசமான உணவுகளை சமைப்பது, ஆட்டம் பாட்டம் என கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஷில்பா ஷெட்டியும் தனது குழந்தை, கணவர் என நேரத்தை செலவழித்து வருகிறார்.
அண்மையில் அவரது யோகா வீடியோ வைரலானது.

துணிகளை அடுக்கும் ஷில்பா

துணிகளை அடுக்கும் ஷில்பா

இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை ஷேர் செய்திருக்கிறார். ஒரு குறும்படம் போன்ற அதில் கணவர் மகன் மற்றும் பணிப்பெண்ணுடன் நடித்திருக்கிறார். அதாவது அலமாரியில் துணிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருக்கிறார் ஷில்பா ஷெட்டி.

பணிப்பெண்ணுக்கு முத்தம்

பணிப்பெண்ணுக்கு முத்தம்

அப்போது அவரது கணவர் ராஜ் குந்த்ரா அவருக்கு முத்தம் கொடுக்க முயற்சிக்கிறார். அதற்கு தான் வேலையில் பிஸியாக இருக்கும் போது முத்தமிடக் கூடாது என அவரது கணவரை திட்டுகிறார். அப்போது வீட்டை சுத்தம் செய்யும் பணிப்பெண் குறுக்கிட்டு வேலை செய்யும் போது முத்தமிடக்கூடாது என கெஞ்சினாலும் விட மாட்டேங்கிறார், புரிய வையுங்கள் என ஷில்பாவிடம் கூறுகிறார்.

புரட்டி எடுத்த நடிகை

புரட்டி எடுத்த நடிகை

இதனால் கோபமடைந்த ஷில்பா ராஜ் குந்த்ராவுக்கு தர்ம அடி கொடுத்து புரட்டி எடுக்கிறார். இந்த வீடியோவை ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்த சில மணி நேரங்களிலேயே 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்துள்ளனர்.

கிளாஸ் ஆக்ட்டிங்

கிளாஸ் ஆக்ட்டிங்

அவர்களின் நண்பர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலரும் இந்த வீடியோவுக்கு ரியாக்ட் செய்துள்ளனர். ஷில்பா ஷெட்டியின் சகோதரியான ஷமிதா ஷெட்டி ஏராளமான சிரிக்கும் ஈமோஜிகளை ஷேர் செய்துள்ளார். நடிகர் ரோஹித் ராய் கிளாஸ் ஆக்ட்டிங் பிரதர் என ராஜ்குந்த்ராவின் நடிப்பை பாராட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X