இவ்வளவு ஈசியா சிரசாசனத்தை செய்ய முடியுமா? நிரூபித்து காட்டிய பாலிவுட் நடிகை
மும்பை : பாலிவுட்டின் முன்னணி ஹீரோயினாக வலம்வந்தவர் ஷில்பா ஷெட்டி.
தனது உடலை தற்போதும் மிகவும் பிட்டாக வைத்துக் கொண்டு தற்போதைய நாயகிகளுக்கு டப் கொடுத்து வருகிறார்.
யோகாசனங்களை செய்வதில் மிகவும் ஈடுபாடு காட்டிவரும் ஷில்பா ஷெட்டி, தற்போது சிரசாசனத்தை செய்து அசத்தியுள்ளார்.

பாலிவுட் முன்னணி நடிகை
பாலிவுட்டின் முன்னணி ஹீரோயினாக வலம்வந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர். இதையடுத்து ராஜ் குந்த்ரா என்பவரை மணந்து தற்போது மும்பையில் செட்டில் ஆகியுள்ளார்.

பிட்னசில் கவனம்
யோகா உள்ளிட்டவற்றை செய்வதன்மூலம் தனது உடலை தற்போதும் பிட்டாக வைத்துள்ளார் ஷில்பா. இதன்மூலம் முன்னணி ஹீரோயின்களுக்கு டப் கொடுத்து வருகிறார். மேலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மேலும் ட்விட்டர், இன்ஸ்டாகிராமிலும் தொடர்ந்து பரபரப்புடன் செயல்பட்டு வருகிறார்.

யூடியூப் சேனல் நடத்தும் ஷில்பா
மேலும் யூடியூப்பிலும் ஒரு சேனலை நடத்தி வருகிறார். இதில் சமையல் மற்றும் உடல்நலம் குறித்த வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். கொரோனா காலத்தில் இவரது வீடியோக்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. பெரும்பாலும் இவரது வீடியோக்கள் பிட்னசுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்கும்.

சிரசாசனம் செய்த ஷில்பா
அவ்வப்போது யோகாசனங்களை செய்து அசத்துவார். இந்நிலையில் தற்போது சிரசாசனத்தை செய்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆசனங்களின் ராஜா என்று கூறப்படும் இந்த ஆசனத்தை செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அவர் மூன்று பதிவுகளாக பட்டியலிட்டுள்ளார்.

மிகுந்த பயிற்சி தேவை
இந்த பயிற்சி மூலம் தன்னுடைய தோள்கள் உள்ளிட்டவை வலிமையாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் பயிற்சியாளர் இல்லாமல் இந்த ஆசனத்தை செய்வது முறையல்ல என்பதையும் கூறியுள்ளார். மிகுதியான பயிற்சிக்கு பிறகே தன்னால் இந்த ஆசனத்தை செய்ய முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











