விஜய் இது உங்களுக்காக.. வாத்தி கம்மிங் பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட பிரபல பாலிவுட் நடிகை!
சென்னை: விஜயின் வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல பாலிவுட் நடிகை செம்ம ஆட்டம் போட்ட வீடியோ வைராலாகி வருகிறது.
Recommended Video
பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி பாஜிகர் படத்தின் மூலம் 1993ஆம் ஆண்டு இந்தியில் அறிமுகமானார். இந்தி படங்களில் உச்சம் தொட்ட ஷில்பா ஷெட்டி தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் நடிகர் விஜயுடன் குஷி படத்தில் மேக்கோரினா பாடலுக்கு நடனமாடினார். இதனால் தமிழ் ரசிகர்களுக்கும் பரிட்சயம் ஆனார் ஷில்பா ஷெட்டி.

மாஸ்டர் பட பாடல்
இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி மீண்டும் விஜயின் பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். விஜய் மற்றும் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தள்ளிப்போகும் ரிலீஸ்
மாஸ்டர் படத்தின் பாடல்களுக்கு பலரும் டிக்டாக் செய்து வருகின்றனர். குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் பிரபலங்கள் இடையே பெரும் பிரபலமாகியிருக்கிறது. ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் ஆக வேண்டிய மாஸ்டர் படம் கொரோனா வைரஸின் தாக்கத்தால் தள்ளிப்போகிறது.

விஜய் இது உங்களுக்காக..
இந்நிலையில் ஷில்பா ஷெட்டிக்கும் மாஸ்டர் காய்ச்சல் பிடித்துள்ளது. மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு அசத்தலாய் டிக்டாக் செய்திருக்கிறார் ஷில்பா ஷெட்டி. மேலும் விஜய் இது உங்களுக்காக.. லவ் திஸ் சாங் என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

வைரலாகும் வீடியோ
அதனை பார்த்த விஜயின் ரசிகர்கள் அந்த வீடியோவை ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே விஜே ரம்யா, ரோபோ ஷங்கர் மற்றும் அவரது மகள் உட்பட பலர் டிக்டாக் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











